பக்கம்:அருமையான துணை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாயம் 全9 அதிமனிதனுக, அரக்களுக, சித்துகள் புரிவதாகக் கனவுகள் ஆக்கிக் களித்தான். அலாவுதீனின் ஜினி அவனுக்குத் தோழனுய்க் கிடைத்து விட்டதாக-விக்கிரமாதித்தன் வேதாளம் ஏவலாளாக வந்து வாய்த்துவிட்டதாகட தேவ மகள் ஒருத்தி காதலியாக வந்துசேர்ந்ததாக-இனிய தேவதை தனக்கு நற்றுணேயாக வந்து குடிபுகுந்ததாகஇந்தவிதச் சுகமான கனவுகளே ஆக்கி, இனிய நிகழ்ச்சிகளை ஒத்திரித்து, தன்னுள் தான் சொக்கிக் கிடக்கும் போக்கும் அவனிடம் வளர்ந்து வந்தது. சில சமயம் அவையே நிஜம் போலும், எதிரே காண்பன நடப்பன எல்லாம் வெறும் மாயைகள்போலவும் அவன் எண்ணவும், சில சமயங்களில் நம்பி மயங்கவும் செய்தான். இம் ம ன தி லே நிலைபெற்றுவிடும்படி - ம ய க்கு த் தோற்றத்தையும் நிஜங்களேயும் பகுத்துப் பிரிக்கும் உணர்வுத் திறன் சேதமுற்றுப் போகும்படி-ஏதோ ஒரு அதிர்ச்சி அவனை தாக்கியிருக்க வேண்டும். வாசுதேவின் இந்த விளக்கம் பொருத்தமாக இருப்ப தாகவே மற்றவர்களுக்கும்பட்டது. மறுபடியும் வந்து பார்த்த டாக்டர், வாசுதேவனது விளக்கத்தைக் கேட்டு விட்டு பெருவிரலாலும் நடுவிரவின லும் மோவாயை வருடியபடி நின்ருர். தீவிர யோசனையில் இருப்பது போல் காட்டிக் கொண்டார். பிறகு நிதானமாகப் பேசினர் இருக்கலாம். எல்லாம் எஸ்கேப்பிளம் தான். கனவு களில் வாழ முயல்வது, நீங்கள் குறிப்பிடுகிற போதைச் சரக்குகள் மூலம் அல்லது குடிவகைகள் முலம், தன்னையும் பிரத்தியட்ச உலகையும் அன்ருடத் தொல்லைகளையும் பிச்சுப்பிடுங்கல்களையும் வி ட் டு வி ல கி தி ற் க முயற்சிப் பதே எஸ்கேப்பிலம் தான். வாழும் துணிச்சல் இல்லாதஉண்மைகளை எதிர்கொள்ளும் திராணி குன்றிப்போனமனேதைரியத்தை இழந்துவிட்ட ஒரு போக்கு தான் இது எல்லாம். பைத்தியம் பிடித்து அலைவது கூட ஒரு வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/58&oldid=738742" இலிருந்து மீள்விக்கப்பட்டது