பக்கம்:அருமையான துணை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩 அருமையான துணை எஸ்கேப்பிலம் தான். அது ஒருவன் தாளுக விரும்பி ஏற்றுக் கொள்ளாததாக இருக்கலாம். ஆயினும் ஒர்ரீஸ் அன்ட் பிராப்ளம்ளினல் திணறிக் குழம்புகிற மனசுக்கு இயற்கையே ஒரு போக்காகக் காட்டிவிடுகிற எஸ்கேப்பிலம்தான் மென்ட் டல் அபெர்ரேஷன்ஸ் என்று சொல்லவேண்டும். தம்ம யங் ஃபிரண்டுக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன். அன்ருடச் சிக்கல்களால், நித்தியப் பிரச்சினைகளிளுல் திணறித் திண்டாடிய-வாட் இஸ் ஹிஸ் நேம்?-திஸ் யங் ஃபெல்லோ-ஓ எஸ், கைலாசம், அமைதியற்று, கனவு க%ாறு பின்னியவாறு, சரியாகச் சாப்பிடாமல், நெடுக அலைந்திருக்க வேண்டும். சில தினங்களாக வெயில் கடுமை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. மென்ட்டலி அன்ட் பிவிக்கலி விக் ஆன நிலையிலே கடுமையான வெயிலில் திரிந்த இவரை

வெயில் பாதிச்சிருக்கு லன் ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்க வேண்டியது. நல்ல காலம், தெருவிலே விழுந்து கிடக்கவே, வீட்டிலே வந்து கிழங்கிப் படுத்திட்டார். செத்தவன் மாதிரி சில மணி நேரம் கிடந்திருக்கலும். யாரும் கவனிச்சிருக்க காட்டாங்க. பிறகு வேறும் காப்பி, மோருன்னு யாராரோ தத்ததைச் சாப்பிட்டிருக்கார். அப்பவே அவர் அவராக இல்லை. மென்ட்டல் விஸ்டம் பாதிக்கப்பட்டு விட்டது. அவருடைய எஸ்கேப்பின நினைவோட்டம் வலிமை உடைய தாகி விட்டது, இவரை மனநோய் மருத்துவ மனேக்கு அனுப்புவதுதான் நல்லது. அதுக்கு வேண்டிய எற்பாடுகளைச் செய்வோம்." டாக்டர் போய்ச் சேர்ந்தார். அவரோ , வாசுதேவோ, நண்பர்களோ கைலாசத்தை மனநல மருத்துவத்துக்காக ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் அல்லது உரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் போய் விட்டது. அவனுடைய எஸ்கேப்பிஸம் அவனுக்குத் துணைபுரிந்த்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/59&oldid=738743" இலிருந்து மீள்விக்கப்பட்டது