பக்கம்:அருமையான துணை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாயம் 莎莲 கைலாசம் எழுந்து தின்ருன் ஒரு சிட்டுக்குருவி உல்லாச மாகத் திரிவதை, கத்திக்கொண்டு துள்ளித் துள்ளிப் பாப் வதை, ஜிவ்வெனப் பறப்பதை வேடிக்கையாகப் பார்த்தான். விட்டு விடுதலையாகு! சின்னஞ் சிறு சிட்டுக்குருவி போலே! என்று கத்தினுன் நான் குருவி. ஜாலியான சிட்டுக்குருவி என்று தவ்வித் தவ்வி, மாடிப்படிகளில் குதித்துக் குதித்து மேலே போஞன். மொட்டை மாடிக்கே போய்விட்டான். அங்கே கைபிடிச்சுவர்மீது ஏறி நின்று கீழே பார்த்தான். வெயில் பளபளத்தது. உலகம் ஒளியில் குளித்தது. பக்கத்து வீட்டில் குளுகுளு என வளர்ந்து நின்ற பூச்செடிகளும் பிறவும் ஜில்லென மிளிர்ந்தன. எல்லாம் இனிமைகளாய், அற்புதங்களாய், அழகுத் துளிகளாய் அவனைத் தாக்கின, சிரித்தன. நட்சத்திர ஜி.கிளுக்கள் சிமிட்டுகிற பச்சை மெத்தை: அதோ எனக்காக விரித்து வைத் திருக்கிறது. எனக்காகக் காத்திருக்கும் இன்பராணி அங்கே பதுங்கிக்கொண்டு கண்ணு மூச்சி விளையாடுகிருள் என்று அவன் சந்தோஷ மாகச் சொன்ஞன், அவனைக் கண்காணித்தபடி பின்னலேயே வந்த வாசுதேவ் புன்முறுவல் பூத்தார். அவர் வாய் திறப்பதற்குள், கை நீட்டி எட்டிப் பிடிப்பதற்குள், காரியம் நிகழ்ந்து விட்டது- - கைலாசம் கீழே குதித்து விட்டான். தரையில் அவன் மண்டை மோதி பலத்த காயம். மூக்கில் சரியான அடி, அவன் ஒரே அடியாக நழுவி ஓடி விட்டான். "ஐயோ பாவம்! சோகமூச்செறிந்து, கண்கலங்கி தின்ருர் வாசுதேவ், - சிவாஜி', ஆண்டு மலர் 1970

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/60&oldid=738745" இலிருந்து மீள்விக்கப்பட்டது