பக்கம்:அருமையான துணை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துணை போட்டிருக்கே?' என்று கூச்சலிட்டான். சிறுமியின் முதுகி லும் தலையிலும் அறைகள் கொடுத்தான். சிங்காரச் செடிகள் அருகே சிரிக்கும் பூச்செண்டுபோல் காட்சி அளித்த சிறு பெண், தந்தையின் தாக்குதலால் நிலை குஆந்து முகம் விகாரமாக, கோரக் குரலெடுத்து அழுது கொண்டே ஓடியது. பெரியவருக்கு அப்போதுதான் ஒரளவு மன அமைதி ஏற்பட்டது. அந்தக் கழுதைக்குத் தோட்டத்திலே என்ன வேலே அதை இனிமே இங்கே வரவிடாதே என்று எச்சரித்து விட்டு, உள்ளமும் உணர்வுகளும் சமன் உறுவதற்காக தன் சேரில் சாய்ந்தார். அதற்கு முன்னதாக, கத்திய தொண்டை இதமடைய, ஒருபாட்டிலில் தயாராக இருந்த 'ஆப்பிள் ஜூஸ்" ஐ கண்ணுடித் தம்ளரில் ஊற்றி மெது மெதுவாக உறிஞ்சிக் குடித்தார். மற்றவர்கள் அவரவர் அலுவல்களைக் கவனிக்கப் போய் ټجي. عيم ئي بيم : * يم.؟: š_芝。芦汗、 பங்களாவாசி சிவானத்தம் அவர் க ள து வீட்டுத் தோட்டம் அந்தப் பெரிய நகரத்தில் பெருமைக்குரிய ஒரு சில தோட்டங்களில் ஒன்று. சுத்தமாகவும் நவீன முறையிலும் பேணப்பட்டு வந்தது அது. பலரகமான பூச்செடிகளும், பூக்காத வெறும் இலை விசேஷச் செடிகளும், கொடிகளும், இதர தோட்டங்களில் இல்லாத அற்புத இனங்களும் அங்கு செல்லப் பிள்ளைகள்போல் வளர்க்கப்பட்டு வந்தன. பெரிதவர் செடிகள்மீது மிகுந்த பாசமும் பற்றுதலும் கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும். ஆறு வயசுப் பிள்ளே செல்லத்துக்கு அது எங்கே புரியும். பாவம் அவளுடைய அப்பா முத்துசாமி தோட்டத்தில் சதா பாடுபட்டுக்கொண்டிருந்ததுதான் தெரியும். செடிகளுக் கெல்லாம் தண்ணீர் பாய்ச்சுவது, மண்ணைக் கொத்துவது, புதிது புதிதாகச் செடிகளே நட்டு வளர்ப்பது-எல்லா வேலை களையும் அவன்தான் கவனித்து வந்தான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/63&oldid=738748" இலிருந்து மீள்விக்கப்பட்டது