பக்கம்:அருமையான துணை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பே தம் முக்கபிள்ளைக்கு வயது என்ன இருக்கும் என்பது அவருக்கே தெரியாத சங்கதி. எழுபது எழுபத்தொண்ணு இருக்குமா? எழுபத் தஞ்சை நெருங்கியிருக்கலாம்”, எ மு படத் த று முடிஞ் சிருக்குமோ?-இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைக் கூறும் போது, உம் உம்...இருக்கும் இருக்கும்...இருக்கலாம்' என்பதில் எதையாவது அவர் சொல்விவைப்பார். அவருக்கே திட்டவட்டமாக எதுவும் தெரியாததுதான் காரணம். அவரிடம் ஜாதகக் குறிப்பு எதுவும் இல்லை, அவருடைய வயதைத் துல்லியமாகக் காட்டக்கூடிய ஆதாரங்களும் ஒன்று மில்லை. அவர் அநேக வருஷங்களாக வயது எழுபது" என்று சொல்லிக்கொண்டிருந்தவர்தான். அவருக்கே அது அலுத்துப் போகவும், எழுபத்தஞ்சு' என்று சொல்ல ஆரம்பித்தார். இப்படிச் சில வருடங்கள் சொல்லிக்கொண்டிருப்பார். பிறகு ஒரே தாவு. எண்பது என்று கூற ஆரம்பித்துவிடுவார். அவரது வயதுக் கணக்கைப் பொறுத்த வரையில், அவர் வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்ற நியாயம் தான். அவர் எழுபதையும் அதற்கு மேற்பட்ட எண்ணையும் தொடவிரும்பாமல், அறுபத்தாறு, அறுபத்தெட்டு’ என்று எதையாவது சொல்லிக்கொண்டிருந்தால், அது சரியில்லை என்று யார்தான் மறுத்துவிட முடியும்? இல்லை; அப்படி மறுப்பதற்கு, மறுத்துப் பேச விரும்புகிறவரிடம், ஆதாரம் தான் என்ன இருக்கிறது? பின்னே என்ன! பேச்சை விட்டுத் தள்ளும்! மூக்கபிள்ளை புதுப்பட்டி என்கிற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே-ஏன், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/68&oldid=738753" இலிருந்து மீள்விக்கப்பட்டது