பக்கம்:அருமையான துணை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64.

அருமையான துணை

 கட்டிஞர். தாம் வசதியாக இருந்து, சாவதற்கு நல்ல இடம் வேணுமே என்று எண்ணித்தான் வசதியாய், பெரிசாம் இதைக் கட்டிஞர். இதில்தான் மனநிறைவோடு செத்தார். அவர் எந்த ஊருக்கும் போனதில்லை எங்க அப்பாவும் இங்கேயே இருந்து, பல வழிகளிலும் சம்பாத்தியம் பண்ணி, வயல்கள் வாங்கினர். அவர் கல்யாணம் விசேஷம் என்று சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வருவாரே தவிர, வீளுக கர் சுற்றியது கிடையாது. சந்தோஷமாகத்தான் செத்தாரு, நானும் இங்கேயே இருந்து, வயல்களை கவனிச்சுக்கிட்டு, திம்மதியாக இருக்கேன். மனநிறைவோடு சாவேன்’ என்று அவர் எப்போதாவது சொல்வது உண்டு. அவருக்கு உள்ளூரிலேயே கல்யாணம் ஆயிற்று. அதனல் மாமஞர் வீடு, அங்கே இங்கே என்று அயலூர் போக வேண்டிய அவசியம் தலேகாட்டாது போயிற்று. அந்த விஷயத்திலும் பின்க்ளக்கு ரொம்ப திருப்தியே. அந்த ஊரிலேயே அவரைப்போன்ற நோக்கு பெற்றிருந் தவர்கள் வேறு சிலரும் இருந்திருக்கக்கூடும். இருந்தார்கள். அவர்கள் மூக்கபிள்ளைக்கு முன்பே தங்களது நெடும் பயணத்தை மேற்கொண்டு விட்டார்கள். எனவே மூக்க பிள்ளையின் அபிப்பிராயம் அந்த ஊரின் புதிய தலைமுறையின ருக்கு விசித்திரமானதாகவும், கிணற்றுத்தவளே மகுே பாவம்' ஆகவும் ஒலித்தது. முதலில், அவருடைய மகனுக்கே அது பிடிக்கவில்லை. செல்லையா டவுன் பெரிய பள்ளிக்கூடத்தில் படித்தான். ஊரிலிருந்து ஆற்றங்கரைப் பாதையாக அநேக பையன்கள் போய்ப் படித்துவிட்டு வந்த பள்ளியில்தான் அவனும் படித் தான். ஆளுல், இரண்டு மைல் நடந்து ரயில் கெடி"யை அடைந்து காத்திருந்து ரயில் வந்ததம் ஏறிப்போய், பிறகு சாயங்காலம் ரயிலில் வந்து இறங்கி, பழையபடி நடந்து, இருட்டுகிற சமயத்தில் வீடு வந்து சேர்ந்து கொண்டிருந்த சில பையன்களோடுதான் அவனும் போய்வந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/73&oldid=983259" இலிருந்து மீள்விக்கப்பட்டது