பக்கம்:அருமையான துணை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பேதம்

65

பார்வை பேதம் 65 அவன் கெட்டிக்காாப் பையன். படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகப் பெற்றிருந்தான். அதஞல் சிரமங்களைப் பொருட்படுத்தாது, படிப்பையே கரும மாக ஏற்று, அந்தக் கருமமே கண்ணுக இருந்தான். அவன் அம்மா பர்வதம் இருந்தவரை அப்படி நடந்தது. அவள் இறந்த பிறகு அவன் டவுனில், ஹாஸ்டவிலேயே தங்கிப் படிக்கும்படி மூக்கபிள்ளே ஏற்பாடு செய்துவிட்டார். விடுமுறை காலத்தில்தான் ஊருக்கு வருவான். அவனுக்குப் பொழுதே போகாது. அந்த ஊரின் பின்தங்கிய நிலமை’ களும், அங்கு வசிப்பவர்களின் குறைபாடுகளும் அவனுக்கு மணக்கசப்பை உண்டாக்கி வந்தன. அவன் கல்லூரியில் படித்துத் தேறி, உத்தியோகத்துக்கு வலை வீசி, ஒரு வேலையும் தேடிக்கொண்டான். சில வருடங் களுக்கு ஒருமுறை வெவ்வேறு ஊர்களுக்கு மாறுதல் அளிக்கும் ஒரு உத்தியோகம் அது. நல்ல சம்பளம் கிடைத்தது. ஊர் மாற்றங்கள் அவனுக்கு அலுப்புத் தரவில்லை. மகிழ்ச்சியே அளித்தது. மூக்கபிள்ளை தான் அலுத்துக்கொள்வார். இதென்ன பிழைப்பு: ஒரு இடத்திலே தங்கியிருக்க முடியாமல், அடிக்கடி குடிசையைத் துரக்கிக்கிட்டு, ஊர் ஊராக அலையிற வேலை : என்னமோ அவனுக்குப் புடிச்சிருக்கு, பின்னே நமக்கென்ன: அவர்கள் சமூக நியதிப்படி, பெண்ணப் பெற்ற புண்ணியவான்கள் தேடிவந்தார்கள். பையன் பி. ஏ. படிச்சிருக்கான். நல்ல வேலை பார்க்கிருன். தங்கக் கம்பி; இடமும் நல்ல பெரிய இடம்’ என்று நற்சான்றுகள் கூறி, "நகை ஐயாயிரம் ரூபாய்; ரொக்கம் மூவாயிரம் தாருேம்; கல்யாண மும் நடத்திவிடுகிருேம்’ என்று ஏலம் கூறிக் கொண்டு நெருக்கினர்கள். பிள்ளைவாள் பிகுப் பண்ணிஞர். அதனுல் நகை ஏழாயிரம் ரூபாய், கையிலே ரொக்கமா ஐயாயிரம் தாரோம். கல்யாணத்தையும் சிறப்பா நடத்தி வைக்கிருேம். சீர்வகைகளையும் நிறையவே செய்வோம்" என்று வாக்களித்த இன்னொரு பெரிய இடத்தின் மகளே

...? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/74&oldid=983260" இலிருந்து மீள்விக்கப்பட்டது