பக்கம்:அருமையான துணை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ அருமையான துணை மூக்கபிள்ளை, மகன் செல்லையாவுக்கு வாழ்க்கைத் துணை ஆக்கினர். தமது கடமை முடிந்தது என்ற திருப்தியில் செல்லேயாவின் ம ன வி யு ம் எஸ். எஸ். எல். சி. படித்தவள். நாகரிக நோக்கு கொண்டவள். அதளுல் அந்தப் பட்டிக்காட்டுப்பய ஊருக்கு ஏன் போகனும்: என்று நினைத்தாள். அ வ ள் சொல்படி செல்லையா நடந்துகொண்டான். ஆகவே, புதுப்பட்டிக்கு அவர்கள் எப்பவாவது வந்துபோவதுகூட, ஒன்றிரு வருடங்களுக்குப் பிறகு நின்றேவிட்டது. - அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. பேரன் பேத்தி களேப் பார்க்க வரும்படி மகன் தந்தைக்கு அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருந்தான். ஆளுல் மூக்கபிள்ளைக்கு இருந்த ஊரைவிட்டு அசைய மனம் இல்லை. கோயில் மாதிரி" அவருக்குத் தோன்றிய தனது வீட்டைவிட்டு வெளியே எழுந்தருள அவருடைய திரு வுளம் இசையவில்லை. ஆகவே, வயல் சோலி, அது இது என்று ஏதேனும் காரணங்கள் கூறித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். மகன் மருமகள் எல்லோரும் 'துரா தொலைவில் இருந்ததும் அவருக்குச் செளகரியமாயிற்று. ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை. அறுப்பு முடிந்ததும், நெல்லே அவித்து, அரிசியாக்கி, மூட்டைகளாக லாரியில் ஏற்றி பத்திர மாக மகனுக்கு அனுப்பிவிடுவார். அதில் அவருக்கும் திருப்தி: மகனுக்குப் பெருமை, மருமகளுக்குச் சந்தோஷம். அநேக வருடங்களுக்குப் பிறகு, புதுப்பட்டிக்கு அருகில் உள்ள பெரிய நகரம் ஒன்றுக்கு மாறுதல் பெற்று, செல்லையா வந்து சேர்ந்தான். செளகரியமான வீடும் கிடைத்திருந்தது. அவன் பதுப்பட்டி வந்து அப்பாவையும் நகருக்கு வருமாறு: அழைத்தான், இங்கே தனியாக, சமையல்காரி சமையல் செய்து போட, உதவிக்கு ஆள் இல்லாமல் கஷ்டப் படுவானேன்? இத்தனை காலமும் இருந்தது சரிதான். இனி மேல் கொஞ்சம் வசதியாக, பேரன் பேத்திகளைக் கொஞ்சிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/75&oldid=738761" இலிருந்து மீள்விக்கப்பட்டது