பக்கம்:அருமையான துணை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பேதம் 67 கொண்டு, ஒய்வாக இருக்கலாம் அல்லவா?’ என்று சொன்னன். மூக்கபிள்ளை அதற்கு இணங்காமல் போகவே, சரி' உங்க இஷ்டம். இருந்தாலும் ஆசையாகக் கூப்பிடுறேன். ஒரு மாசத்துக்காவது அங்கே வந்து தங்கியிருங்கள். உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்படி நானும் ராசம் மாளும் கவனித்துக்கொள்கிருேம். குழந்தைகள் தாத்தா தாத்தா என்று உங்களைப் பார்க்கும் ஆவலில் இருக்கிரு.ர்கள். நீங்கள் மறுக்கக்கூடாது என்று கோரின்ை. பெரிய பிள்ளை யோசித்தார். பின்னர், பெரிய மனக பண்ணி இணங்கினர். ஒரு நாளும் குறித்து மகனே அனுப்பி வைத்தார். அதன்படியே மூக்கபிள்ளை நகரத்துக்கு, மகன் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தார், வீடு கலகலப்பாக இருந்தது. குழந்தைகள் ஏதோ பூதத்தைக் கண்டதுபோல் மிரண்டும் வெட்கப்பட்டும் ஒளிந்து கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குத்தான் அப்படி. பிறகு அவர்களது இயல்பின்படி கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டு, அங்கு மிங்கும் ஒடி ஆடினர்கள், குதித்தார்கள், பொருள்களைப் போட்டு உடைத்தார்கள். ஒருவரை ஒருவர் குறைகூறியும், அடித்தும், சண்டை முற்றியதும் அழுதும் பொழுதுபோக் கிஞர்கள். அம்மாக்காரி பிள்ளைகளை அடக்குகிறேன் என்று ஓயாமல் ச த் த ம் போட்டுக்கொண்டே இருந்தாள். எப்போதும் கர்ணகடூரமான ஓசைகளை எழுப்பிக் கொண் டிருப்பதில் அந்த வீட்டில் எல்லோருக்குமே உற்சாகம் அதிகம் என்று மூக்கபிள்ளைக்குத் தோன்றியது. அவர் வெகுநேரம் வரை பொறுமையாக இருந்து பார்த் தார். வந்த அன்றைக் கே பிள்ளைகளைக் கண்டிக்க வேண்டாம் என்று எண்ணிஞர். வரவர அதுகள் பிள்ளைகளாகத் தோன்றவில்லை அவருக்கு. குரங்குகளாகவே தோன்றினர். அவருக்கே பொறுமை போய்விட்டது. ஏ. குரங்குகளா, ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/76&oldid=738762" இலிருந்து மீள்விக்கப்பட்டது