பக்கம்:அருமையான துணை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பேதம் 翁母 நாகரிகமோ!" என்று அலுத்துக்கொண்டார் அவர், நகர தாகரிகப் பழக்க வழக்கங்கள் தன் மகன் வீட்டிலும் நிலையாக வேரூன்றி வளர்வதை அவர் ஒவ்வொரு கணமும் உணர்ந் தார். காலையில் எழுந்ததுமே பல் விளக்காமல், காப்பி இடிக்கும் நாகரிகம் அக்குடும்பத்தில் எல்லோரிடமும் படித் திருந்தது. இது என்ன வழக்கம்! சீ, இது நல்லதில்லே!" குழாய் தண்ணீரில் ஒன்றரை வாளி பிடித்து, குளித்தேன் என்று பெயர் பண்ணுவதும் அவருக்குச் சரிப்பட்டு வரவில்லை. ஐந்தாறு வாளிகள் தண்ணிர் பிடித்துக் காலி பண்ணிஞல், மருமகள் முணுமுணுத்தாள். அவர் காலையில் நீராகாரம் கேட்கிறபோதும்; தோசை வேண்டாம், பழையச்சோறு வேண்டும் என்று கோருகிற போதும், அவள் முனகினுள். இங்கே பழையதும் கிடையாது, நீத்தண்ணியும் இல்ல்ே’ என்று அவள் சொல்வது அவருக்குச் சிடுசிடுப்பதுபோல் தோனும். - முன்னிரவில் அவர் கோயிலுக்குப் போகலாம், வாங்க என்று பேரன்களை அழைத்தபோது, நாங்க சினிமாவுக்கு போகப்போகிருேம், கோயில் என்ன கோயில் என்று அவர்கள் கூச்சவிட்டார்கள். ষ্ট্র இவ்வாறு, மூக்கபிள்ளைக்கும் பிந்திய தலைமுறையினருக் கும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அபிப்பிராய பேதம் எழுந்துகொண்டே இருந்தது. சே, நான் இங்கே வந்தது தப்பு. இங்கே அமைதியும் இல்லை; வசதிகளும் இல்லே. அதனல் மனசில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை" என்று: அவர் தனக்குத்தானே அநேக தடவைகள் சொல்லிக் விருந்தும் மருந்தும் மூணுநாள் என்பாக. இந்த நகர வாசத்தையும் மூணு நாளைக்கு மேலே என்னல் சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று அவர் தீர்மானமாகக் கருதிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/78&oldid=738764" இலிருந்து மீள்விக்கப்பட்டது