பக்கம்:அருமையான துணை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துணை 7 曼 ஆளுல், செல்லம்மா அவ்வாறு திருப்தி அடையவில்லை. இப்படித் திருவிழா நடத்துவதைவிட, சாமியை சும்மா கோயிலிலேயே இருக்கும்படி விட்டு விடலாமே!’ என்ருள். அத்துடன் வாயை மூடிக்கொண்டாளா? வழக்கம்போல் எங்க ஊரிலே பார்க்கனுமே ஒவ்வொரு திருவிழாவையும் என்று நீட்டி நீட்டிப் பேசலாள்ை. இந்த ஊரிலே சாமிக்கு பூவுக்குக்கூடப் பஞ்சம் வந்துட்டுதே: பாவி மட்டை ஊரிலே அரளிப்பூவும் மஞ் சனத்தி இலையும் கூடவா இல்லாமப் போச்சு? அதுகளைக் கட்டி சாமி கழுத்து நிறையப் போட்டால் என்னவாம்? எங்க ஊரிலே இப்படித் தரித்திரம் கொண்டாட மாட்டோம் அம்மா. கோயில் பிராகாரத்திலே நந்தவனம் இருக்கு. ரோசாப்பூ மாதிரி அடுக்கு அரளி-ஒவ்வொரு பூவும் எவ் அளவு அழகா, பெரிசா இருக்கும் தெரியுமா?-பிச்சிப் பூ, இருவாச்சி, ரோசா-எல்லாப்பூக்களும் எப்பவும் கிடைக்கும். சமிக்கு நிறைய மாலைகள் போட்டு, அலங்காரம் செஞ்சு... இங்கே தீவட்டிக்குக்கூட தட்டுப்பாடு வந்துட்டுதே. ஒரு திவட்டி ஒரு அரிக்கன் லாத்தல், ஒரு பெட்ரோமாக்க லயிட்டு இந்த மூணும் தானே சப்பரத்து முன்னலே போகுது? எங்க ஊரிலே சாமி புறப்பட்டா-ஏ அம்மா ரெண்டு கண்ணு கொண்டு பாக்க முடியாது. எத்தனே தீவட்டிக! பெரிய சக்கரத் தீவட்டி வேறே, எவ்வளவு கியாஸ் லயிட்டுக!...” இப்படி வர்ணித்து, அந்தக் காட்சியை மனக் கண்ணுல் கண்டு, அகம் மகிழ்ந்து போளுள் அவள் ஒவ்வொரு தடவை பும் இப்படித்தான். கல்யாணம் நடந்தாலும் சரி. இழவு விழுந்தாலும் சரி அல்லது எந்தி நிகழ்ச்சியாயினும் சரியே-- அவை செல்லம்மாளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமை வது கிடையாது. அமையவும் முடியாது. விவசாய விஷயம், வேலைக்காரர் பிரச்சினை. வீட்டு வசதி, கடைச் சாமான்கள், காய்கறிகளின் தரம்-இப்படி எந்தப் பேச்சு வந்தாலும் செல்லம்மா எங்க ஊரிலே’ என்று ஆரம்பித்து, உயர்வாகப் பேசாமல் இருக்கமாட்டாள். அவள் பேச் சி ன் படி பார்க்கப்போளுல், அந்த ஊரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/83&oldid=738770" இலிருந்து மீள்விக்கப்பட்டது