பக்கம்:அருமையான துணை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் 27 என்று சொல்லவும், அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. சசி போ!' என்று சீறிக் கையை உதறினுள். எனக்கு இந்த ஊரிலே ஒட்டும் இல்லே, உறவும் இல்லே. நான் எங்க ஊருக்குப் போறேன்’ என்று கூறி முன்னே நடத்தாள், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற அவன் பார்வையில், சிறிது தொலைவில் வந்த ராசா அங்கேயே நின்று தன்னை அழைப்பது பட்டது. கைாைசம் அவனிடம் போனுன். அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே மனக சரியால்ேலே. இரண்டு நாளா வீட்டிலே ஒரே ரகளே. இன்னிக்கு ரொம்: முத்திட்டுது. நான் எங்க ஊருக்குப் போறேன்னு கிளம் பிட்டா. அங்கே சோலேயும் சுனையும் குளுகுளுன்னு: இருக் கிறமாதிரித்தான்! பாலும் தேனும் பெருகி ஓடுகிற மாதிரித் தான்! போகட்டும், போகட்டும். அங்கே இருக்கற நிஜ மையை நேரிலே தெரிஞ்சுக்கட்டுமே என்று செல்லம்மாவின் மகன் ராசா புலம்பின்ை. பிறகு கைலாசம், நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். அம்மா தனியாப் பயணம் போக முடியாது. நீயும் அவளோடு போயிட்டு வா. இந்த ரூபாய்' என்று பத்து ரூபாயை அவனிடம் கொடுத்தான். ரூபாய் எதுக்கு? என் கிட்டே பணம் இருக்கு என்ருன் கைலாசம். இதுவும் இருக்கட்டுமே என்று சொல்வி அவனை அனுப்பிவைத்தான் ராசா. மெதுவாக நடந்துகொண்டிருந்த செல்லம்மாளே எட்டிப் பிடிக்கக் கைலாசத்துக்கு நேரமோ சிரமமோ தேவைப்பட வில்லை. அவளிடம் நானும் கூட வந்து, உன்னை ரயிலில் ஏற்றி விடுகிறேன்... டிக்கட் எடுத்துக்கொண்டு, ரயிலில் ஏறுவது உனக்குச் சிரமமாக இருக்குமே? என்று சொன்னன். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். என்ன சிரமம்? நான் ஆத்தங்கரை வழியாகவே எவ்வளவு தூரம் நடத்திருக் கேன்! எங்க ஊரிலேயிருந்து ரயில் கெடிக்கு அஞ்சு மைலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/86&oldid=738773" இலிருந்து மீள்விக்கப்பட்டது