பக்கம்:அருமையான துணை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சோர்க்கம் 器篮 கிடக்கிறதுக்கு இல்லாமே?’ என்று அவன் மனம் முனு. இறங்க வேண்டிய فاسي வந்ததும் கைலாசம் செல்லம்மாளே மெதுவாக பஸ்ளிலிருந்து பிடித்து இறக் கிஞன். அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. நடக்க வேண்டி யதுதான்; வேறு வழி இல்லை. ஆச்சி!' என்று தயக்கத்துடன் அவள் முகத்தைப் பார்த்தான் அவன். 'உம். எங்க ஊரு இன்னும் கொஞ்ச தூரத்திலே தான். தடந்து போயிடலாம் என்று, தலைமீது சேலை முந்தானை யைப் போட்டுக்கொண்டு நடக்கலானுள் அவள். ஊரை அணுகிவிட்ட உற்சாகம் அவளிடம் காணப்பட்டது. வழியில் ஒரு சிறு கடை தென்பட்டது. அதில் பசியைத் திர்க்கக்கூடிய உணவு வகை இல்லாது போயினும், வாழைப் பழமும் வேர்க்கடலையும் சோடாவும் கிடைத்தன. கைலாசம் திருப்தி அடைந்தான். செல்லம்மா இரண்டு பழம் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டாள். வேர்த்து விறுவிறுத்து அவர்கள் ஊர் எல்லையை அடைந்தபோது இரண்டு மணிக்கு மேலேயே இருக்கும். நான் இந்த அம்மன் கோயில் மண்டபத்தில் இருக்கேன். நீ நடுத்தெருவுக்குப் போயி, மஞ்சக் காவி அடிச்ச பெரிய வீடு سایبر ஒண்னு இருக்கும். அங்கே எங்க பெரியம்மை மகன் பாண்டின் பிள்ளை இருப்பாரு, அவரை உங்க அக்கா கூப் பிடுருள்னு சொல்லி, கோயில் திறவுகோலையும் எடுத்துக் கிட்டு வரச் சொல்லு, ஒரு தம்ளரிலே பாலும், ஒரு செம்பிலே தண்ணியும் கொண்டுவரச் சொல்லு' என்று செல்லம்மா அவனிடம் கூறினுள். தமிழ் நாட்டின் தெற்குக் கோடியில் உள்ள வறுமை கொலுவிருக்கும் பலப்பல குக்கிராமங்களைப் போல்தான் அந்த ஊரும் இருந்தது. சில வீடுகள் இடிந்து பாழடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/90&oldid=738778" இலிருந்து மீள்விக்கப்பட்டது