பக்கம்:அருமையான துணை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8委 அருமையான துணை வாங்கிட்டு வாங்க... அவள் வாய் ஓயாது அடுக்கிக் கொண்டே இருந்தது. அம்மா லோகநாயகி.! உன்னத் தேடி வந்துட்டேன். நீ என்னை மறக்கலே: நானும் உன்னே மறக்கவே என்று அடைத்துக் கிடந்த கதவுகளுக்குப் பின்னல் குடியிருந்த அம்மன நோக்கிப் பேசினுள். இந்தக் கைலாசம் என்ன, போனவன் ஒரே போக்காப் போய்ட்டான்? தம்பியைக் கூட்டிக்கிட்டு வர இத்தனை நேரமா? என்று முனகினுள். எனக்கு என்னமே ஒரு படியா வருது. சித்தெ நேரம் தலையைக் கீழே சாய்க்கிறேன்' என்று படுத்தாள். அம்மா லோகநாயகி, காப்பா த் து, தாயே!” என்பதுதான் அவளுடைய கடைசிப் பேச்சாக ஒலித்தது. - கைலாசம், பாண்டியன் பிள்ளையோடு வந்தவன், ஆச்சி கிடந் த கோலத்தைக் கண்டு பதறிப் போனன். ஆக்சி! ஆச்சி! என்று கூவியவாறு, அவளைத் தொட்டு உலுக்கினுன். மூக்கருகே கை வைத்துப் பார்த்தான். ஆச்சி, இதுக்குத் தான இந்த ஊருக்கு வந்தே?’ என்று அலறிஞன். செல்லம்மாளைத் தொட்டுப் பார்த்த பாண்டியன் பிள்rே பும் உண்மையைப் புரிந்துகொண்டார். 'உம். அக்கா ஆயுசு இப்படி முடியனுமின்னு இருந்திருக்கு, பாருமேன். பிறந்த மண்ணிலே வந்து மண்டையைப் போடணுமின்னு உசிரைப் பு:டிச்சி வச்சிருந்திருக்காளே! என்று அவர் புலம்பினர். அவருக்கு ஒரு பெரிய வருத்தம்- தன்னைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட அக்காவை உயிரோடு பார்த்துப் பேச முடியாமல் போய்விட்டதே என்று. மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வின் போக்கு களேயும். ஒவ்வொருவரையும் படாதபாடு படுத்தி எப்படி எப்படியோ ஆட்டிவைக்கிற மனம் என்கிற விஷயம் பற்றி யும் எண்ண அலகள் கைலாசத்தின் உள்ளத்தில் எழுந்தன; புரண்டன: குழம்பின. பல பேர் நிகழ் கால வாழ்க்கையைச் சரியாக அனுபவிப்பதே இல்லை; அவர்களை அனுபவிக்க விடுவ தில்லை அவர்களுடைய மனம். இன்றும் பலர் சென்றுபோன காலத்தின் இனிய நினைவுகளில் மட்டுமே வாழ்க்கையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/93&oldid=738781" இலிருந்து மீள்விக்கப்பட்டது