பக்கம்:அருமையான துணை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் 密器 காண்கிருர்கள். வேறு பலர் இனி வரக்கூடிய எதிர்காலக் கனவுகளில் வாழ்வின் குளுகுளுப்பைக் காண்கிருர்கள். இவர் களுக்கெல்லாம் தி க ழ் க | ல ம் சுட்டெரிக்கும் கோடை வேயின்ாகவே படுகிறது என்று நினைத்தான் அவன். ஒரு வேளை, நிகழ்காலத்தின் வெறுமையும் வறட்சியுமே இவர்களே క్టేడి நினைவுலகத்துக்கும் கனவுலகத்துக்கும் துரத்தி அடிக்கிறதோ என்னவோ?-இப்படியும் ஒரு எண் ண ம் , ர ன் டு கொடுத்தது. நிகழ்கால வெறுமையில் இதயம் வெதும்பிய செல்லம்மா ஆச்சியின் மனம், இறந்துபோன காலத்தின் நினைவுகளில் இன்பம் கண்டது. அவற்றை மோகனமாகவும் பசுமையாக வும் காண்பதற்கு அவளுடைய கற்பனை துணை புரிந்தது. வெயிலில் திரியும் பிரயாணி பசுஞ்சுனைகளையும் குளிர் சோஆ களையும் மாயைத் தோற்றமாகவும், மயக்கு நிழல்களாகவும் கண்டு, உண்மை என நம்பித் திரிவதுபோலவே ஆச்சியும் நடந்துகொண்டாள். தமிழ் ஐயா ஒருவர் சொன்னரே, கஸ்தூசி மான் இனிய நறுமணத்தை நுகர்கிறது. அது தனக்குள்ளிருந்தே கிளம்பு கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், மான் அந்த வாசனை யைத் தேடி ஒடுகிறது. ஒடி ஒடிச் சாகிறது என்று. அதே மாதிரித்தான், ஆச்சியின் நல்லூர் அவள் மனவெளியில்தான் இருந்திருக்கிறது. அதை அவள் புரிந்துகொள்ளவில்லை. தான் பிறந்து வளர்ந்த நல்லூர் கிராமத்தில் அந்த சொரிக்கம் இருக்கிறது என்று நம்பி, வீளுக வந்து சேர்ந்தாள். அதன லும் நஷ்டமில்லை. அவள் ஆத்மா திருப்தி அடைந்திருக்கும்: -இப்படி அவன் மனம் கருதியது. என்னய்யா, இப்படி இடிஞ்சு போயி உட்கார்த்துட்டா? உம். மேலே நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிப்போம்: என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு பாண்டியன் பிள்ளை கைலாசத்தையும் முடுக்கினர். ஆமா. முதல்லே ராசாவுக்குச் சொல்லியனுப்பனும்: என்று பரபரப்பு காட்ட ஆரம்பித்தான் கைலாசம். சுதேசமித்திரன், தீபாவளி மலர், 1967.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/94&oldid=738782" இலிருந்து மீள்விக்கப்பட்டது