பக்கம்:அருமையான துணை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"דיא கள்ளபார்ட்காரி பெற்ருள் என்பது யாருக்கும் தெரியாது. அவள் என்ன ஆளுள், எங்கே போளுள் என்பதும் தெரியாது. இடைக் காலத்தில் செத்துப்போயிருக்கவும் கூடும். இதை சிதம்பரத்திடம் சொன்னேன். அவர் புன்முறுவல் பூத்தார். அதே காமாட்சிதான். அவள் இந்த ஊர்க்காரியே. அவள் சாகவும் இல்லை; வேறு எங்கும் போய்விடவும் இல்லை; இங்கேயேதான் இருக்கிருள் என்ருர். இதே ஊரிலா? இப்பகூடவா? நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். "ஆமாம்." கிழவியாகி இருப்பாளே? 'கிழவி என்று சொல்வதற்கில்லை. வயசு ஐம்பது இருக் கும். ஆளுல், பார்வைக்கு அது தெரியாது. ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டுடனும் மன நிறைவோடு வாழ்ந்து வந்திருப்பு தஞல், அவள் தோற்றத்திலும், முகத்திலும் இனிய பொலிவு குடிகொண்டிருக்கிறது" என்று வர்ணித்தார் நண்பர். அது என் வியப்பை வளர்த்தது. அவள் ஏன் நாடகத் தொழிலை தீடீரென்று விட்டு விட்டாள்? இந்த ஊரில் எவ்வளவு காலமாக இருக்கிருள்: இப்போது என்ன செய்கிருள்?’ என்று கேள்விகளை அடுத்தி னேன். நண்பர் சொன்னர் இதில் எல்லாம் யாரும் அக்கறை காட்டுவதில்லை. அ வ ள் நாடகக்காரியாக இருந்தாள். கள்ளபார்ட் வேஷத்தில் புகழ்பெற்றவள் என்பதுகூட இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு மறந்துவிட்டது. அவள் ஒதுங்கி, எதிலும் ஒட்டாமல் பூஜை விரதம் என்று காலத்தைக் கழித்து வருகிருள். சாப்பாட்டுக்கு மயக்கமில்லை. அந்தக் காலத்திலேயே அவளுக்குப் போதுமான நிலமும் தோட்டமும் சேர்ந்திருந்தது. சொந்த வீடும் உண்டு. ஒற்றை மனுஷி தானே!" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/96&oldid=738784" இலிருந்து மீள்விக்கப்பட்டது