பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




 “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,
 மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்,
 பிள்ளை அவனுடைய ஆரூர் கேட்டாள்,
 பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்”

என்று நாவுக்கரசர் நவின்ற தாண்டக அடிகளுக்கு ஏற்ப நான் முதன்முதலில் பாரதிதாசனார் தம் புதுமைப் பாடல்களைத் தான் படித்துப் பார்க்க நேர்ந்தது.நான் அவரைப் பாராமலேயே அந்தப் பாவேந்தர் மீது பேரன்பு கொள்ளலாயினேன். ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நான் எண்ணுகின்றேன். அப்போது அறிஞர் குத்தூசி குருசாமியார் திருவல்லிக்கேணியிலே ஒரு சுவடியை வைத்துக்கொண்டு அச்சுப்பிழைபார்த்துக் கொண்டிருந்தார். அதிலுள்ள யாவும் பாடல்களாகவே இருந்தன. 'அவை என்ன பாடல்கள்?' என்று நான் அந்த அறிஞரை வினாவினேன். அவர் உடனே பிழை திருத்துவதை நிறுத்திக் கொண்டு அதை என்னிடம் கொடுத்தார். அதிலுள்ள பாடல்கள் தமிழைக் குறித்தனவாகவும் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டனவாகவும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவனவாகவும் கலந்திருந்தன. நான் அந்த அற்புதப்பாடல்களைப் படித்துப் பார்த்து விட்டு இவை பாரதியார் பாடல்களையும் விஞ்சியனவாக இருக்கின்றனவே! இவைகளைப் பாடியவர் யாவர்? என வினாவினேன். அப்போது அவர் இந்தப் பாடல்களைப் பாடியவர் பாரதியாரின் மாண-