பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/100





வரேஆவா். கனக சுப்புரத்தினம் என்பது அவர் தம் இயற்பெயர். பாரதிதாசர் என்னும் புனைபெயரால் இவைகளை அவர் பாடியிருக்கிறாா். இன்னும் இரண்டொரு நாளில் சுவடியாக வந்துவிடும்,” என்று அவர் கூறினார்.

இந்தி எதிர்ப்புக் காலத்தில் அந்தப் புரட்சிப் பாடல்களே எங்களுக்குப் பெரிதும் உதவின. 1937-இல் ஸ்டாலின் ஜெகதீசன் கட்டாய இந்தி ஒழியவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவருடைய உண்ணாவிரதம் முதலில் சி.டி.நாயகம் அவர்கள் தம் இல்லத்தில் தான் துவங்கியது. முதலில் ஒரு சில நாட்களேனும் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். அப்போது சில அன்பர்கள் இந்தி எதிர்ப்புக்காக ஸ்டாலின் ஜெகதீசன் உண்ணாவிரதம் இருந்து வருதலைத் தெரிவித்துச் சிவஞானம் பூங்காவில் ஒரு கூட்டம் போட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அறிக்கையினைத் தாங்கள் அச்சடித்துக் கொடுப்பதாகவும் கூறினார்கள். அதற்கு இரண்டொரு வாரத்திற்கு முன்பு ஈ.வெ.ரா. பெரியார் கட்டாய இந்தியைக் கண்டித்து எழுதியதோடு கூட்டம் போட்டு இதைக்கண்டிப்பதற்கு எந்தப் புலவனும் முன் வரவில்லையே! என்றும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை என்னுள்ளத்தைப் பெரிதும் கவர்ந்ததால் சிவஞானம் பூங்காவில் ஒரு கூட்டம் போட்டுக் கண்டிப்பதாக ஒப்புக் கொண்டேன்.

அப்போது தியாகராய நகரிலுள்ள இராஜாஜி வீட்டு வாயிலில் சில தமிழ் அன்பர்கள் மறியல் செய்தனர். அந்த மறியலைக் கண்ட இராஜாஜி அவர்கள், “இந்தி மொழியை எங்கே கற்பிக்கின்றார்களோ அங்கே சென்று மறியல் செய்யுங்கள். என் வீட்டு வாயிலில் மறியல் செய்வது சிறிதும் பொருந்தாது,” என்று கூறினார். அப்போது இந்து தியலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் கட்டாய இந்தி வகுப்பு, ஒரு முன் மாதிரியாக நடந்து வந்ததால் அங்கே ஊர்வலமாகச் சென்று அந்தப்பள்ளியின் வாயிலிலேயே மறியல் செய்ய வேண்டும் என்னும்