பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/104

அவருக்குச் செய்ததுதான் சிறப்பு. நான் அவருக்கு ஓராண்டு இளையவன்'என்று கூறினேன். அடுத்த கூட்டம் மதுரையில் நிகழப்போகின்றது. அதற்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் நேரில் தெரிவித்ததோடு கடிதம் மூலமாகவும் எனக்கு நினைப்பூட்டினார். நான் அவ்விதமே மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கே சோமசுந்தர பாரதியாருக்கு 70ஆம் ஆண்டுவிழா நடந்தது. அங்கே சோம சுந்தரபாரதியாரைப்பாராட்டிப் பேசினேன். அதற்கு அடுத்துச் சென்னையிலும் பிறகு சிதம்பரத்திலும் குழுக் கூட்டங்கள் நடந்தன. சிதம்பரம் கூட்டத்தில் தான் நான் முதன் முதலில் பாரதிதாசரைக் கண்டு பேசி அளவளாவினேன். பிறகு நடந்த புலவர் குழுக்கூட்டங்கட்கு எல்லாம் நானும் பாரதிதாசனும் பெரும்பாலும் சென்றிருக்கின்றோம். நாங்கள் அப்போதெல்லாம் ஒருவருக்கொருவர் அளவளாவி எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதலுண்டு. நாங்கள் கோவைக்குச் சென்றிருந்த போது திரும்பி வருவதற்கு எனக்கும் அவருக்கும் இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. பாவேந்தர் ஏறி அமர்ந்திருந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே நானும் ஏறுவதற்குச் சென்றேன். சன்னல் பக்கமாக அமர்ந்திருந்தவர் என்னைக் கண்டதும் எனக்கு அந்த இடத்தைக்கொடுத்துவிட்டார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. பிறகு அவர் எனக்குப் படுத்துக் கொள்வதற்கும் இடம் தந்துவிட்டு அவர் உட்கார்ந்த வண்ணமே இருந்தார். அவருடைய கட்டளைக்கு நான் இணங்க வேண்டியவனாகவே இருந்து விட்டேன். இந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்தே அவர் என் மீது வைத்திருந்த பேரன்பினை நான் தெரிந்து கொண்டேன். அவருடைய பெருந்தன்மை வாய்ந்த குணமும், எனக்கு நன்கு தெரியவந்தது. `குயில்' பத்திரிகை ஆரம்பிக்கும் போது அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் கண்டிருந்தபடி நான் எனக்குத்