பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11:1'நினைவுத் துளிகள்

களுள் ஒருவரான அவரிடம் உடனே என் கவிதையைக் காட்டுவதெங்ஙனம்? காட்டவும் விருப்பமிருக்கும்;தயக்கமுமிருக்கும். பின்னர்க்காட்டுவேன்.சுவையாகவுள்ளதைப் பாராட்டுவார். தொல்காப்பியம் எவ்வாறு யாப்பிலக்கணம் கூறுகிறது என்பதைக் கூறுவார். ஒரு தந்தை மகளின்பாடலைக் கண்டு மகிழ்வதுபோல் மகிழ்வார்.

ஒருசமயம் அவரவ்வாறு கேட்டபோது நான் ஒரு கவிதையை அவரிடம் கொடுத்தேன். மதுரையில் 'பிராமணர் இளைஞர் சங்கம்'டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு நூற்றாண்டுவிழா வெடுத்தபோது என்னைக் கவியரங்கேற அழைத்தார்கள்.நானும் 'தமிழ்த்தாத்தா' மீது நான்மணிமாலை பாடினேன். பாடல்களை இசையோடும் பாடினேன். அவ்விழா முடிந்த பின்னர் ஒருநாள் கவிஞர் அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடம் அந்தக் கவிதையைக் கொடுத்தேன். அவர் முன்னால் என் பாடல்கள் எம்மாத்திரம்? அவர் அப்பாடல்களில் திருத்திக் கொடுத்தபடி என்னிடம் உள்ளது. கவிஞன் தன்னைப் பிறர் கட்டுப்பாடு செய்வதை விரும்பான் என்பதவர்க்கு நன்கு பொருந்தும். எங்கள் கல்லூரியிலும் பிற கல்லூரிகளிலும் ஒரேநாளில் பேச இசைந்து வருவார். நேரங்குறிப்பிட்டு அழைப்பிதழில் அச்சிட்டிருக்கும். விரும்பிய இடத்தில் விரும்பியஅளவு நேரம் பேசுவார். யார் அவரிடம் என்ன சொல்ல முடியும்? அவருடன் ஒரே மேடையில் பேசும் நற்பேறு பெற்றுள்ளேன். அவர் தலைமையில் உரையாற்றும் அரும் வாய்ப்பும் அடைந்துள்ளேன். அவர் வாயால் பாராட்டுப் பெறும் பெரும்பேறும் கிட்டியுள்ளது. சான்றாக பாரதியார் விழாவை அவரது பிறந்த நாளில் மதுரையில் கொண்டாடினார்கள். அந்த விழாவில் அவர் தலைமையில் பேசி அவர் வாயால் பாராட்டுப்பெறும் நல்ல வாய்ப்பையும் பெற்றுள்ளேன். 1938ஆம் ஆண்டு மதுரையில் சுயமரியாதை மாநாடு