பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/112

ஒன்று நகரதூதன் ஆசிரியர் திருமலைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் பேரறிஞர் அண்ணா அவர்களும் அதில் கலந்துகொண்டார்கள். அவ்விழாவிற்கு புரட்சிக் கவிஞரும் வந்தார். அம்மாநாட்டில் என் மாமனார் இராவ்சாகிப் ஆறுமுகநாடார் அவர்கள் பெரும்பங்கு கொண்டார்கள். அவருக்கு இவ்விரு வரையும் நகரதூதன் ஆசிரியர் அறிமுகம் செய்துவைத்தார். உடனே கவிஞர் தமது கவிதைத்தொகுதி முதற் பாகத்தைத் தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக என் கணவருக்குத் தந்தாராம். அன்றுமுதல் என் கணவருக்கும் புரட்சிக் கவிஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக என் கணவர் என்னிடம் கூறியிருக்கிறார்.

'நாய்ஸ்' ஆங்கிலப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் தமிழ்ப் பாடம் நடந்துகொண்டிருந்தது. அன்று புரட்சிக் கவிஞரின் நிலாப்பாட்டை ஆசிரியர் கற்றுத் தந்தார். அவர் குழந்தைகளிடம் இப்பாடலைப் பாடியவர் பாரதிதாசன் என்று கூறினர். "அவர் யார் தெரியுமா?"என்று வினவினார். உடனே வகுப்பிலிருந்த என்மகள் 'ஏழிசை' ஆசிரியரிடம் “ஓ! எனக்குத் தெரியுமே! அவர் எங்கள் தாத்தா!” என்று கூறினாள்.ஏனென்றால் அவள் அவரை அப்படித்தான் அழைப்பாள். ஆசிரியர் வியந்தபடி 'உன் தாத்தாவா?’ என்று வினவ அவள் “ஆமாம்! எங்கள் தாத்தாதான். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். வரும்போது உங்களிடம் கூறுகிறேன்' என்றாள்.

அதற்குப்பின் கவிஞர் எங்கள் வீட்டிற்கு வந்தார். என் மகள் அவரைப் பார்த்துத்"தாத்தா! அந்த நிலாப்பாட்டு நீங்களே எழுதியதா?" என்று கேட்டாள். என்னே அவளறியாமை!உடனே அவளை வாரி எடுத்துக்கொண்டு. 'நல்ல கேள்விகேட்டாயே என்னை! எந்தெந்தப்பயலோ என் கவிதைகளையும் கருத்துக்களையும் திருடுகிறான் என்று நான் வழக்காட வேண்டியிருக்க நீ என்னையே ஐயுற்றாயே!"என்று நகையாடினார்.