பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'

113/நினைவுத் துளிகள்



ஒருநாள்,"பலமுறை நான் உங்கள் வீட்டிற்கு வந்துள்ளேன்.நீங்கள் சென்னைக்கு வரும்போது கட்டாயம் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும்”என்று அன்புடன் அழைத்தார்.அவ்வண்ணம் நாங்கள் சென்னை சென்றபோதவர் வீட்டிற்க்குப்போனோம்.அப்போது பாண்டியன்பரிசு என்ற அவரது காப்பியத்தைப் படமாக்கும் திட்டம் நடந்து வந்தது.படமெடுக்க ஆகும் செலவிற்கு ஒருவர் பெருந்தொகை கடன்தர இருந்தார்.அவரால் அனுப்பப்பட்ட ஆள் பத்திரத்தைக் கவிஞரிடம் கொண்டுவந்தார்.அவரைப் பார்த்துக் கவிஞர்,“சரி. பத்திரம் வந்துவிட்டதா? நான் கையெழுத்திட்டுத் தந்து விடுகிறேன். இதோ! தம்பி (என் கணவரைச்சுட்டி) வருவார்.அவரிடம் அத்தொகையைக் கொடுத்தனுப்புங்கள்’’என்று சூதுவாதறியாமற் கூறினார்.இதைக்கேட்ட என் கணவர் “ஐயா!உங்கள் வழக்கறிஞரைக் கலந்து கேட்காமல் இப்படித் திடீரென முடிவிற்கு வரல் சரியன்று.எனவே அவரைக் கலந்து முடிவிற்கு வாருங்கள்” என்று கூறினார்கள்.யாரையும் நம்பும் அத்தகைய வெள்ளையுள்ளம் குழந்தையுள்ளம் அவர்க்குண்டு.

ஒருமுறை அவர் மதுரைக்கு வந்திருந்த போது அவரது இசையமுதைப் பற்றிப் பேசினோம்.நானவரிடம் “உங்களிசையமுதிலுள்ள பாடல்களுக்குச் சுரமமைத்தால் என்ன?'’என்றேன்.“இன்னபண்,இன்னதாளம் என்றும் குறிப்பிடலாமல்லவா?”என்றேன். அதற்கவர் “ஏனம்மா பாடுவோன் கற்பனைக்கு எல்லைகட்ட வேண்டும்? பாடுபவன் ஆற்றலுக்கேற்பப் பாடிப் பழகட்டும் என்றார். இது அவரது பரந்த மனப்பாங்கிற்குச் சான்று. அவர் மேடையில் பேசுங்கால் புரட்சியும் புதுமையும் பேச்சில் பொங்கித் ததும்பும். சான்றாக,மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் பணியாற்றும்போது அவரங்கு பேசினார். அப்போது அவர் “லவனும் குசனும், இராமன் பகைவனான இராவணன் குழந்தைகள். அதனால்தான் அவர்கள் சிறுவரேயாயினும் இராமன் அனுப்பிய