பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/118



பாவேந்தர் அவர்களை என் சொந்த ஊரான நாமக்கல் போடிநாய்க்கன்பட்டிக்கு அழைத்து வந்தேன். நாமக்கல் தமிழர் சங்கக்கட்டிடத்தில் பெரியபுராணம்,இராமாயணம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். பாவேந்தரின் நூல்களை அச்சிடுவதற்காகவும், அவர் எழுதிய நாடகங்களை நடத்துவதற்காகவும் 'முத்தமிழ் நிலையம்' என்ற அமைப்பை உருவாக்க நானும் என் நாமக்கல் நண்பர்களான திருவாளர்கள் என்.கிருஷ்ணராஜ், கா. கருப்பண்ணன், கா.பெருமாள் ஆகியோரும் ஒரு முடிவுக்கு வந்தோம். பிறகு பாவேந்தர் அவர்களை ஊருக்கு அனுப்பிவைத்தோம்.

15நாட்கள் கழித்துச்செட்டிநாடு கானாடுகாத்தானுக்குப் புறப்பட்டுவரும்படி கவிஞரிடமிருந்து எனக்கு ஓர் அவசரக் கடிதம் வந்தது. கானாடுகாத்தான் தனவணிகர் திரு.வை.சு.சண்முகமும் அவர் மனைவியார் திருமதி மஞ்சுளாபாயும் பாவேந்தருக்கு மிகவும் வேண்டியவர்கள். வை.சு.சண்முகம் செட்டியார் அப்போது செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் வீடான 'இன்பமாளிகை’க்கு நான் சென்றேன். பாவேந்தரும் எனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தார்கள். முத்தமிழ் நிலையத்தைத் தொடங்குவது பற்றிய செய்திகளை அங்கு ஆராய்ந்தோம். அதற்கு அங்கு சிறிது ஆதரவும் இருந்தது.

திரு.வை.சு.சண்முகம் அவர்கள் இல்லத்தில் நான் தங்கியிருந்தபோது மலேயாத் தமிழ் முரசில் வெளியாகியிருந்த கவிஞரின் 'தென்றல்' ★ என்ற பாட்டைப்பார்த்தேன். மிகச் சுவையான பாடல்! குளித்தலைக்குப் பாவேந்தரோடுநான் சென்றிருந்தபோது, அங்குவந்திருந்த இளந்தாடி நெடுஞ்செழியனிடம் அப்பாட்டைப் படித்துக்காண்பித்தேன்; மிக


★ பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது இத் தென்றல்