பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125 /இன்ப இரவு



யும் பிடில், மிருதங்கம், கடம் முதலிய பக்கவாத்தியங்களை வாயிலேயே இசைத்தும் மக்களை மகிழ்விப்பார்

முதலில் சிக்கல் இராஜகோபாலன் (இன்றைய கவிஞர் சுரதா) அவர்கள் “மாடுமேய்ப்பவனிடம் எனக்கென்ன வேலை?” என்ற பாடலை உரைநடையாகச் (இயல்) சொல்வார். அடுத்து ஞானமணி அதையே இசையோடு பாடுவார்.T.V இராதாமணி என்ற பெண் அப்பாட்டுக்கு அபிநயம் பிடித்து அடுத்தாற்போல் ஆடுவார். இஃது முதலில் துவங்கும் முத்தமிழ் நிகழ்ச்சி.

பின்னர் கீழ்க்கண்ட பாவேந்தர் பாடல்களுக்குப் பரத நாட்டியமும், ஒரியண்டல் நடனமும் நடைபெறும்,

“அதோ பாரடி அவரே என்கனவர்” “மாடுமேய்ப்பவனிடம எனக் கென்ன வேலை” “கூடைமுறங்கள் முடித்து விட்டோம் காடை இறக்கைபோலே” “பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி “சோலையில் ஓர்நாள் என்னையே தொட்டிழுத்து முத்தமிட்டான்” “உவகை, உவகை உலகத்தாயின் கூத்து”

திருவாளர் ஞானமணி †இசை அமைப்பதிலும் பாடுவதிலும் தன்னிகரற்ற மாமேதை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் எத்தனையோ இசைப்புலவர்கள் பாடுவதையும், இசை அமைத்திருப்பதையும் கேட்டிருக்கிறேன். ஆனால் ஞானமணிபோல் திறமைமிக்க இசைப்புலவர் சொற்பம்.

“மாடுமேய்ப்பவனிடம் எனக்கென்ன வேலை-வஞ்சி என்றழைத்தான் ஏனென்றேன் மாலை” என்ற பாடலை


திருவாளர் எம. எஸ். ஞானமணி தற்போது சென்னையில் இருக்கிறார். தெலுங்குப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். 21-1-72 ஆம் நாள் வெளியான ஆனந்த விகடனில் இன்றைய தமிழக முதலவர் மாண்புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் "நான் ஏன் பிறந்தேன?’ எனற பெயரில் எழுதிய தன் வரலாற்றுக் கட்டுரையில் பாராட்டி எழுதியிருக்கும இசைப் புலவர் ஞானமணி இவரே'