பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/126



ஞானமணி பியாகடை ராகத்தில் பாடும்போது, ஆயிரம் முறை கேட்டாலும் ஆசை தீராது. அப்படியே ஒவ்வொரு பாடலும்.

‘வெய்யில் தாழவரச் சொல்லடி-இந்தத்
 தையல. சொன்னதாகச் சொல்லடி” -

என்ற பாடலின் கடைசியில் உள்ள

“தாய் அயலூர் சென்று விட்டாள் நாளை-சென்று
தான் வருவாள் இன்று நல்லவேளே
வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள்
மாறி விட்டால் ஆசை எல்லாம் தூளே’

என்ற அடிகளை சங்கராபரணம் ராகத்தில் ஞானமணி பாடுவதும், இரத்தினம் என்ற பெண் அபிநயம் பிடிப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நண்பர்கள் சிலர் இந்தப்பாடலைத் திரும்பத் திரும்பப் பாடும்படி ஞானமணியை வற்புறுத்திக் கேட்பார்கள்.

"பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி" என்ற பாடல் கல்யாணிராகம். அதற்கேற்பப் பரதநாட் டியம் நடைபெறும். 'உவகை உவகை' என்று தொடங்கும் பாடலுக்கு ஓரியண்டல் நடனம் ஆடுவார்கள்.

கடைசி நிகழ்ச்சியாக புரட்சிக்கவி நாடகம் நடைபெறும். காப்பியமாக இருந்த புரட்சிக்கவியை அழகிய மேடை நாடகமாக மாற்றி எழுதினார் பாவேந்தர். ஞானமணி புரட்சிக்கவி உதாரனாக நடித்தார். செல்வி சரசுவதி என்ற பெண் அமுதவல்லியாக நடித்தாள். அப்பெண்ணுக்கு அப்போது 17 வயதிருக்கும். இளமை அழகு இசை, நடிப்பு ஆகிய எல்லாம் ஒருங்கே அப்பெண்ணிடம் அமைந்திருந்ததாகப் பாவேந்தரே அடிக்கடி பாராட்டிப் பேசுவார். முதலில் உதாரனாக நடிக்க மறுத்த ஞானமணி கூட, அப்பெண்ணின் அழகைக் கண்டு மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இன்ப இரவுக்கான விளம்பரத் தட்டிகள், திரைச்சீலைகள் யாவும் சென்னையைச் சேர்ந்த சிறந்த ஒவியர்களைக்