பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127/இன்ப இரவு


கொண்டு எழுதப்பட்டன. இன்ப இரவு நாடகத்தை முதன் முதலில் சென்னை நகரிலேயே அரங்கேற்ற முயற்சி செய்தோம். அங்கு 'தியேட்டர்' கிடைக்காத காரணத்தால் சேலம் சென்ட்ரல் தியேட்டரில் இன்ப இரவை அரங்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 31-1-44 ஆம் நாள் நடிக-நடிகையர்கள் எல்லாரும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

5-2-44ஆம் நாள் சேலம் நீதிக் கட்சிப் பிரமுகரும், சுவர்ணும்பிகா உந்து வண்டி உரிமையாளருமான இராவ்சாகிப் பி. இரத்தினசாமி அவர்கள் தலைமையில் இன்ப இரவு நாடகம் முதன்முதலாக அரங்கேறியது. அதன் பின்னர் சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர், தோரமங்கலம் புலவரேறு அ. வரத நஞ்சைய பிள்ளை, இராவ் சாகிப் குமாரசாமிபிள்ளை ஆகியவர்கள் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது. கடைசியாக 9-2-44ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் 31-1-44 லிருந்து 10-2-44 வரை சேலத்தில் தங்கியிருந்தார்.

பிறகு இன்ப இரவு நாடகக்குழு சேலத்திலிருந்து நாமக் கல்லுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு ஒருநாள் தான் நடைபெற்றது. நாடகத்துக்கு நல்ல வசூல் என்றாலும் எனக்கு அதைத் தொடர்ந்து நடத்தவிருப்பமில்லை. காரணம் ஒரு நாடகக் குழுவைக் கட்டிக் காப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு முதலில் தெரியாமல் போய்விட்டது. நடிகர்கள் நடிகைகள், இசைக்குழுவினர் நாட்டியக்காரர், ஒப்பனைக்காரர் உட்பட ஏறக்குறைய இருபத்தைந்து பேர்களுக்குமேல் இருந்தார்கள் அவர்களையெல்லாம் இழுத்துக்கொண்டு தமிழகமெல்லாம் சுற்றித் திரிவது எனக்குப் பெரும் மலைப்பாக இருந்தது. எனது அனுபவக்குறைவே இதற்குக் காரணம் என்பதை அறிந்தேன். பலமுறை சிந்தித்-