பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129/இன்ப இரவு



மாக நான் போடிநாய்க்கன்பட்டிக்குத் திரும்பவேண்டியிருந்தது. நாடகப் பொறுப்புகளை முருகு. சுப்பிர மணியத்திடம் ஒப்படைத்து விட்டு நான் ஊருக்குத் திரும்பினேன். நான் சென்றமுறை கானாடுகாத்தான் சென்றிருந்தபோது பாவேந்தரின் மூத்த மகளான சரசுவதியின் திருமணம் பற்றிப் பேச்சு நடந்தது. திரு. வை. சு. சண்முகம் செட்டியாரும் அவர் மனைவி மஞ்சுளாபாய் அம்மையாரும் சரசுவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக இருந்தனர். வேலூர் கண்டர் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழாசிரியர் புலவர். கண்ணப்பன் அவர்களே அந்த வரன். திருப்பூர் திராவிடர்கழகத் தோழரும் புரவலருமான திரு. எஸ். ஆர். சுப்பிரமணியம் வீட்டில் புலவர் கண்ணப்பனும், மஞ்சுளாபாயும் எதிர்பாராமல் சந்தித்துப் பேசிய போது இந்தத் திருமணப் பேச்சுத் துவங்கியது. பிறகு வை. சு. சண்முகம் தம்பதியர் இத் திருமண முயற்சியில் முன்னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்தனர்.

நான் என் சொந்த ஊரான போடிநாய்க்கன்பட்டியில் இருந்தபோது 8-1-44 ஆம் நாள் பாரதிதாசன் சரசுவதியின் திருமணம் பற்றிஎனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் வருமாறு!

புதுச்சேரி
8—1—44

அன்புள்ள திரு. ரெட்டியார்

அவர்களுக்கு வணக்கம்,

நானும், வை. சு. வும், கோனாப்பட்டார்களும் திருமண விஷயமாகப் பேசி முடிவு செய்த திட்டப்படி, இன்று வை சு. வுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் நகலை இதில் வைத்திருக்கிறேன், இதை மனதில் வைத்துக் கொண்டு, தயவு செய்து தாங்கள் கரூருக்கு நேரில் மாப்பிள்ளை இருக்கும் இடம் தேடிச்