பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/130



சென்று, நான் தங்களை அனுப்பியதாகச் சொல்லிப் பேசவும், அதில் சொல்லியுள்ள திட்டங்களை அவர்களிடம் (கண்ணப்பரிடம்) கூறிப் பதில் தெரிந்து எழுதவும். ஏன் தங்களை அனுப்புகிறேன் என்றால் வை. சு. மூலமாகத் தான் மணமகனுடைய கருத்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நேரில் என்னிடம் திருமணப்பேச்சு நடக்கவில்லை. ஆதலால் ஒருவருக்கிருவராகக் கலந்து பேச வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

பாரதிதாசன்

கவிஞரின் கடிதப்படி நான் கரூர் சென்று கழகத்தோழர் திரு. இரத்தினம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்களைத் தேடி அடைந்தேன். அவர் வீட்டில் மாப்பிள்ளை கண்ணப்பர் அவர்களும், மஞ்சுளாபாய் அம்மையாரும், ஈரோடு திரு. சண்முக வேலாயுதம் அவர்களும் இருந்தார்கள். பாவேந்தர் என்னை அனுப்பிவைத்திருப்பதாகச் சொல்லி, விபரங்களையும் சொன்னேன். அன்று மாலை நாங்கள் எல்லாரும் மாப்பிள்ளை ஊரான கட்டிப் பாளையத்திற்கு சென்றோம். அன்றிரவே என்னைத் தவிர மாப்பிள்ளை உட்பட, அவர்கன் நால்வரும் பாவேந்தர் அவர்களைக் காணச் சென்னை முத்தமிழ் நிலையத்துக்குச் சென்றார்கள். நான் நேராகப் போடிநாய்க்கன்பட்டி வந்து, மாப்பிள்ளை எனக்குப் பிடித்திருப்பதாகவும், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த திட்டங்களுக்கு அவர்கள் ஒத்துக்கொண்டதாகவும் பாவேந்தருக்கு எழுதினேன். பாவேந்தரிடமிருந்து உடனே எனக்குக் கீழ்க்கண்ட கடிதம் வந்தது.

புதுச்சேரி
19–1–44

தோழர்கள் செல்லப்ப ரெட்டியார், கருப்பணன், கிருஷ்ணராஜ் அவர்களுக்கு,

தங்களுக்கு நான் எழுதினேனென்று முருகு இருந்து விட்ட விஷயமும், முருகு எழுதினாரென்று நான் இருந்து