பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133/இன்ப இரவு



உறுப்பினராக இருக்கும்படி கோரி கடிதம் எழுதினேன். எல்லாரும் ஒப்புதல் அளித்தார்கள். எங்கள் ஊரான போடிநாயக்கன்பட்டி என். கிருஷ்ணராஜ் நிதிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிதிக்குழு கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோள் வெளியிட்டது:

திருவாளர்களான பெரியார் ஈ.வெ.ரா., சர். ஆர்.கே. சண்முகம். டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, மாஜிமந்திரி எஸ். ராமநாதன், மாஜிமந்திரி எஸ். முத்தையா முதலியார். சி.என். அண்ணாதுரை, என். அர்ச்சுணன், அ. இராமசாமிக் கவுண்டர், எஸ்.எல்.பாரதி, எஸ்.ஆர். சுப்பிரமணியம், என். சங்கரன், வி.டி. ஆதிலட்சுமி அம்மாள், இந்திராணி பாலசுப்பிரமணியம், ஏ. திரு நாவுக்கரசு, என். கிருஷ்ணராஜ் ரெட்டியார், கே. கருப்பண்ணன், எம்.செல்லப்ப ரெட்டியார், ஏ.வி.பி. ஆசைத் தம்பி, எஸ்.வேதரத்னம். மணவை ரெ. திருமலைசாமி (நகரதுாதன் ஆசிரியர்) ஆகியோர் விடுக்கும் அறிக்கை:

தமிழ்நாட்டின் ஒப்புயர்வற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் பெரும் சேவை செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பெருந்தொண்டிற்கு நன்றி செலுத்தும் பான்மையோடு ஒரு நிதி திரட்டிக் கவிஞர் அவர்கட்குக்கூடிய விரைவில் அளிப்பதெனத் தீர்மானித்துள்ளோம். இந்தக் காரியத்தை நாம் நிறைவேற்றினோமானால், கவிஞரின் சேவைக்கு ஓரளவு நாம் நன்றியும் பாராட்டும் செய்தவர்களாவோம். ஆதலால் தமிழ் அன்பர்கள் அனைவரும் இந்த நிதிக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிதிக்கு பணம் அனுப்பும் அன்பர்கள் பாரதிதாசன் நிதிக்காக என்று குறிப்பிட்டுக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கக் கோருகிறோம்.

என். கிருஷ்ணராஜ் ரெட்டியார்
நாமக்கல் (சேலம் ஜில்லா)