பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

இன்ப இரவு

இவ்வளவு பெரிய தொகையை ஒரு நல்ல கவிஞர் கையில் கொடுத்து அவரைச் சோம்பேறி ஆக்குகிறார்களே என்று பெரியார் அன்று கருதினார். ஆனால் நிதிவசூலுக்கு அவர் எப்போதும் தடைகூறியதில்லை.

பாவேந்தருக்கு நிதியளிப்புவிழா ஏற்பாடு செய்த நேரத்தில் 'குயில்’ என்ற கவிதை ஏடு ஒன்றினைத் துவங்க வேண்டும் என்று திரு. டி.என். ராமனும் பாவேந்தரும் திட்டமிட்டனர். அது சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நானும் பாவேந்தரும் 10-12-46 இல் புதுவையிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். அப்போது நான் ஏற்கெனவே எழுதிவைத்திருந்த நான் கண்ட காதல்’ என்ற ஒரு கட்டுரையை அவரிடம் தந்தேன். பாவேந்தர் அதைப் படித்துப் பார்த்து, மிகவும் நன்றக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டி, அக்கட்டுரையின் தலைப்பில் கனகசுப்புரத்தினம் கவிஞர் கழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மு. செல்லப்பன்' என்பதாக எழுதி அக்கட்டுரையை குயிலில் வெளியிட்டார்கள். அதை என்னுடைய பெறற்கரிய பேறு என்று கருதிப் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன்; இன்றும் அடைகிறேன்.

1943ஆம் ஆண்டு பாவேந்தருக்கு வயது 53. எனக்கு வயது 33. நான் அவர்களைவிட இருபது ஆண்டு இளையவன், என்றலும் பாவேந்தர் என்னிடத்தில் அளவிலா அன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தார், 'ஐயா அல்லது "ரெட்டியார்!’ என்று தான் என்னை எப்போதும் அழைப்பார். எவ்வளவு கோபமாய் இருந்தாலும் நான் சொன்னால் பாவேந்தர் கேட்டார்; மறுத்து ஒன்றும் சொல்லமாட்டார்.

"நீங்கள் நிதி விஷயத்தைத் துவக்காமலிருந்தால், வேறு யாரும் துவக்கியிருக்கமாட்டார்கள்' என்று என்னைப் யாராட்டிக் கூறுவார்