பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்

'யாரோ நாமக்கல் ரெட்டியாராம்; அவரால் சுப்புரத்தினத்துக்கு நல்ல காலம் வந்துவிட்டது' என்று புதுவை மக்கள் பேசிக் கொள்வதாகப் பாவேந்தர் என்னிடம் பெருமையாகச் சொல்வார்.

வாரத்திற்கு ஒரு கடிதமாவது புதுவையிலிருந்து எனக்கு வரும்; அவ்வாறே நானும் எழுதுவேன். அவரது புதிய கவிதைநூல் அச்சாகி வந்தால் உடனே எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பார். பாவேந்தர் எப்போது பணத்திற்கு எழுதினாலும், உடனே தந்தி மணியார்டரில் பணம் அனுப்புவதுதான் என் வழக்கம்.

பாவேந்தரை நினைக்கும்போதெல்லாம், தமிழ்த்தாய் அணிந்திராத அணியையெல்லாம் சூட்டி, அவளை அலங்கரித்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக வாழ்ந்த மாமேதை” என்று . நான் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு. முதுமையடைந்துவிட்ட என் உள்ளத்தில் பாவேந்தர் நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.

வளர்க பாவேந்தர் புகழ்!