பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143/கவியரசர் பாரதிதாசன்




ரம் செய்துவந்த காரணத்தினால் அக்கிரகாரம் இவரைப் புறக்கணித்திருந்தது. இந்தனையையும் மீறி அவருடைய அற்புதமான கவித்திறன், உண்மையான ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது. இந்த வகையில் அவரைப் புறக்கணிப்பது தமிழுக்கு நஷ்டம் என்ற செய்தியை அக்கிரகார அறிஞர்கள் சிலர், பேராசிரியர் கே. ஸ்வாமினாதன்,ஏ.வி. சுப்ரமண்ய அய்யர் போன்றவர்கள் துணிவுடன் எடுத்துரைக்கத் தயங்கவில்லை.

1944 ல் வானொலிக் கவியரங்கில் பாரதிதாசன், ச. து. சு. யோகியார், ந. பிச்சமூர்த்தி இவர்களுடன் நானும் பங்குபெற்றேன். இது வானொலி நடத்திய இரண்டாவது கவியரங்கு.

1946ல் பாவேந்தருக்குப் பொற்கிழியளிப்பதற்காக ஒரு திட்டத்தை அறிஞர் அண்ணாதுரை மேற்கொண்டு மிகவும் சிறப்பாக நிறைவேற்றி பல்லாயிரங்கள் நிதிதிரட்டிக் கொடுத்தார். இது சம்பந்தமாக பிஷப் ஹீபர் மைதானத்தில் நடைபெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு பாரதிதாசன் கவிதை நயங்களை விமர்சித்துப் பேசியதைக் கேட்ட அறிஞர் அண்ணாதுரை அக்கிரகாரத்து அதிசயப் பிறவிகளில் ஒருவன் என்று என்னை மிகவும் பாராட்டினார். திராவிடநாடு வெளியிட்ட சிறப்பு மலரில் பாவேந்தரைப் பற்றிய ஒரு பாடலை எழுதுமாறு கேட்டு வாங்கிப் பிரசுரித்தார்.

1951ல் பாரதிதாசனுக்கு மணிவிழா. பல மாவட்டங்களைச் சேர்ந்த ரஸிக நண்பர்கள் சிலர் புதுவை சென்று’ மணிவிழா ஏற்பாடுகளுக்குப் பாவேந்தரிடம் அனுமதி கேட்டனர். திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களையும் என்னையும் கலந்து கொண்டு திட்டமிடும்படி சொல்லியனுப்பியிருந்தார்.

ஓர் அமாவாசை தினம். காலையில் அனுஷ்டானங்களுக்குத் தயாராக இடுப்பில் பஞ்சகச்சமும், கையில் தர்ப்பையுமாக நின்று கொண்டிருந்தேன். வாசலில்