பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145/கவியரசர் பாரதிதாசன்



திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் விடுத்த அறிக்கையை எதிரொலித்து மலேசியா முதலிய இடங்களிலிருந்தும் பணம் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் புதிய விளம்பரத்தைக் கண்டு எங்கள் குழுத்தலைவரும் நானும் அதிர்ச்சியடைந்தோம்.

ஒரே நாளில் இரண்டு இடங்களில் விழாவா? கவிஞர் அன்று தஞ்சையில் நேரில் இருப்பார் என்றும் போட்டிருக்கிறதே. அப்படியானால் திருச்சி விழாவின் கதி என்ன? விளம்பரம் உண்மையா? கவிஞர் இதற்கு ஒப்புதல் கொடுத்திருப்பாரா? என்றெல்லாம் குழப்பம் ஏற்பட்டது. கவிஞருக்கு எங்கள் குழுத்தலைவரிடமிருந்து விபரம் கேட்டு ஒரு கார்டும், அதற்கு விடை வராதபடியால் ஒரு தந்தியும் பறந்தன. ஒரே மெளனம்.

கி.ஆ.பெ.வி. அவர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஒழுங்கு மீறிய செய்கையை அவரால் ஒப்ப முடியாது. அதற்குப் பணிந்து போகவும் அவரால் இயலாது.உடனே தாம் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக ஒரு கடிதம் எனக்கு அனுப்பி விழாக்குழுவிற்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார். இச்சங்கடமான நிலைமையில் அவர் மேற்கொண்ட முடிவு நியாயமென்று எனக்கு பட்டபடியால் நானும் எனது ராஜினாமாவுடன் சேர்த்துப் பொருளாளர் ராமநாதனுக்கே அனுப்பி விட்டேன். தலைவர், தாம் இந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்ட அறிக்கையை முன்னர் நிதி அனுப்பியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பி விட்டார் என்று அறிந்தேன். குழுவினர் ’காதல்’ அலுவலகத்தில் கூடி நிலைமையைப் பரிசீலித்தனர். இதற்குள் பராபரியாகச் சிலஉண்மைகள் எங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டன.

விளம்பரம் உண்மை தான் என்றும், யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை கவிஞரைச் சந்தித்துத் திசை திருப்பி விட்டார் என்றும், பத்து நாடகங்கள் போட்டு 60 ஆயிரமாவது வசூலித்து விடலாமென்று கவிஞரிடம்