பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

கவியரசர் பாரதிதாசன்

கும் தெரியாது. நான் தாண்டா அதை நாலு பேர் அறியச் சொல்லனும். சும்மாப் போடு. என் கையெழுத்தில்லே போட்டிருக்கிறேன்” என்றார். அவரது குழந்தை மனத்தையும் அன்பின் பெருமையையும் கண்டு மெய்சிலிர்த்தேன். சிவாஜியின் பதினேழாவது ஆண்டு மலரில் வெளியான அந்தப் பாடல் பின்வருமாறு:

எழுத்தெல்லாம் புதியநடை எண்ணமெலாம் தன்னுடைமை எனவே நாட்டின்

பழுத்தபொதுத் தொண்டு செய்வான் திருலோக சீதாராம் பரப்பும் ஏடு

வழுத்துமோர் சிவாஜியெனல் வண்டமிழ்நா டறியுமந்த மைந்த னுக்குத்

தழைத்ததுவாம் பதினேழாண் டென்றுரைத்தால் மகிழாத தமிழ ருண்டோ?

இவனுயர்ந்தான் அவன் தாழ்ந்தான் என்னும்இன வேற்றுமையோர் அணுவும் இல்லான்

எவன் பொதுவுக்கு இடர் சூழ்ந்தான் அவன் தாழ்ந்தான் அஃதில்லான் உயர்ந்தான் என்று

துவல்வதிலே திருலோகன் அஞ்சாநெஞ் சன்தக்க நூற்கள் ஆய்ந்தோன்

அவனெழுதும் சிவாஜியெனும் வாரத்தாள் வாழிய பல்

லாண்டு நன்றே.