பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்

பல்லேடும் கூடியொரு

    பழந்தமிழின் சீர்த்தியினே
        மறைக்கு மாயின்

வில்லோடும் அம்போடும்

     வரும் பகையைத் தனிநின்று
         வீழ்த்து வான்போல் 

சொல்லோடும் பொருள்சிறக்கத்

     தூய் தமிழின் சீர் சிறக்க
          எழுது கின்ற 

நல்லேடாம் சிவாஜிக்கு

     நல்லாசான் திருலோகன் 

நாளும் வாழ்க!

மணிவிழா நாங்கள் அஞ்சியபடியே ஆயிற்று. தஞ்சாவூரில் எதுவும் நடக்கவில்லை. திருச்சி தேவர் ஹாலுக்கே மாற்றிவிட்டார் யதார்த்தம். நாடகங்கள் போட்டார்கள். வசூல் ஒன்றும் சரியாக இல்லை. பாரதிதாசன் குடும்பத்தோடு அசோக்பவனில் முகாமிட்டார். பரிவாரங்கள் அதிகம். ஹோட்டல் செலவுக்கே வசூலாகவில்லை. பாரதிதாசன் மனவேதனைப்பட்டார். ஓட்டலைக் காலி செய்து விட்டுத் திருவானைக் காவல் ரெங்கூன் ரெட்டியார் சத்திரத்துக்கு வந்துவிட்டார்.

விழாவுக்கு மூன்றே நாட்கள் இருக்கின்றன. பாரதிதாசனுடைய புதல்வர் மன்னர் மன்னனும், மருகர் கண்ணப்பரும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடம் சென்று நிலைமையைக் கூறினார்கள், அவர் இவ்விஷயத்தில் மேலும் கலந்து கொள்வது இயலாத காரியமென்பதைத் தெரிவித்துவிட்டார்.

பின்னர் கவிஞரிடம் என்ன போய்ச்சொல்வது?'என்று கேட்டார்கள். “கவிஞனாக இருப்பது வேறு; மனிதனாக இருப்பது வேறு- என்று, விசுவநாதம் கூறுகிறார் என்று