பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது








“நான் ஒருநாள் காலை விழித்தெழுந்தேன். நான் புகழ் பெற்றுவிட்டேன் என்பதை அறிந்தேன்" ( I awoke one morning and found myself famous,) என்று கூறினான் ஆங்கிலப் பாவலன் பைரன். அவன் எழுதிய நூலாகிய Childe Herold வெளியானவுடன், எல்லா ஏடுகளும் பைரனைப் பற்றியும் அவன் நூலைப் பற்றியுமே எழுதியிருந்தன! எனவே அவனுடைய நூல் எப்படியிருக்கும் நடை எவ்வாறு கவரும் என்பதை யாவரும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பாவலனின் நடையில் எளிமையும் உணர்ச்சியோட்டமும் கைகோத்துச் செல்வதைக் காணலாம். அவனுடைய பாக்கள் உள்ளத்தைக் கவருவதைப் போலவே அவன் தோற்றமும் கவரும்!

தமிழிலே, 'பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூல் வெளி வந்தது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் அவர் புகழ்பரவிவிட்டது. இந்தக் காலத்தில் 'நான் இத்தனைப் புதினங்கள் எழுதியுள்ளேன்’ என்று எண்ணிக்கையைக் காட்டித் தம்மைத்தாமே விளம்பரப்படுத்திக் கொண்டாலும் சிலரை மக்களுக்குத் தெரியாது. பாவேந்தரின் நடையழகும் உடலழகும் போட்டி போடும்.

இந்த இரண்டு பாவலர்கள் மீதும் எனக்கு அளப்பரிய