பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/156


காதல். இந்தக் காதலுக்கு 'ஒருத்திக்கு ஒருவன்’ என்ற வரையறை இல்லை.

சில பாட்டி கதைகளில், இளவரசி ஏதாவது ஓர் இளவரசனின் வில், வாள்திறமையைக் கேட்ட அளவிலேயே காதல் கொண்டு விடுவதுண்டு. அதே போன்று பாவேந்தரின் பாடல்களை இளமையிலேயே படித்துப் படித்துக் காதல் அரும்பக் கூடாத பருவத்திலேயே எனக்கு அரும்பிவிட்டது.

1952 ஆம் ஆண்டு! பாவேந்தர் சேலம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்துக்காகத் திரைப்பட உரையாடல் எழுதவந்து தங்கியிருந்தார். 'மார்டன் கேஃப்' என்ற விடுதியில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டு நானும் சில நண்பர்களும் அவரைக் காணச் சென்றோம். நாங்கள் அவர் தங்கியிருந்த அறையை நெருங்கிக் கொண்டி ருந்தோம். உண்மையிலேயே பாசுவல் (Boswell) என்பவர் சாமுவேல் சான்சன் (Samuel Johnson) என்ற அறிஞரைப் பார்க்க எதிர்பார்த்துக் கொண்டு டேவிசு (Davies)என்பவருடன் இருந்தபொழுது அவர் மனநிலை எப்படியிருந்ததோ அப்படியே இருந்தது. எனக்கும்! சான்சன், இவர்கள் இருந்த இடத்தை நோக்கி வரு வதைப் பார்த்து டேவிசு...... ஆம்லத் நாடகத்தில் ஒரே சியோ (Horatio) ஆம்லத்தின் தந்தையுடைய ஆவியை அவனுக்குச் சுட்டிக் காட்டிக் கூறுவதுபோல்'LooK, my lord, it comes' என்று நாடக முறையில் கூறியதாகக் கூறுவதுண்டு. அதே போன்று நாங்கள் அவருடைய அறையை நெருங்கும்போது திடுமென வெளிப்பட்டார்; எங்கோ வெளியில் புறப்பட்டு விட்டார். டேவிசு கூறியதைப்போல என் நண்பர், 'அதோ... அதேதான்!' என்றார். என்நண்பர் இப்படிக் கூறியது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! அவர் விளக்கஞ் சொன்னார்.