பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167|இழந்த செல்வம்

மு.வ.வுக்கும் பாவேந்தர்க்கும் நல்ல உறவு இருந்ததாகத் தெரியவில்லை; ந்ட்பும் இருந்ததில்லை; சாதாரண அறிமுகம் மட்டுமே இருந்திருக்கிறது. இருவருக்கும் வேறுபாடு நிறைய உண்டு. பாரதிதாசனர் பகுத்தறிவு வாதி, தமிழியக்க முன்னோடி; பெரியார் பாசறைத் தலைவர். மு.வ.முன்னர்ச் சைவசமயவாதி, பின்னர்ச் சமரசவாதி; அரசியலில் காந்திய, தேசியவாதி ஆகவே இருவருக்கும் உறவு குறைவு. கவிஞர் கவியுலகக் குயில் பாட்டும் பண்பாடுமே வாழ்க்கையாகக் கொண்டவர்; மு.வ. வின் புதுத்தமிழியக்கம் கவிஞர்க்குப் புதிதே. கவிஞர் முதியர்; பெரியர்; அவர்க்கு எனத் தமிழ்ப் பேருலகில் பரந்த இடம் உண்டு. அவரைத் தமிழ் உலகம் புரட்சிப்பாவலர் எனப் போற்றியது. அத்தகையவர்க்கு மு.வ. எளியராகக் காட்சி தந்ததில் வியப்பில்லை. புரட்சிக் கவிஞர் யாரையும் எளிதாக் நோக்கும் உயரிய தோற்றம் பெற்றவர். மு. வ. கரியமேனியராயினும் வெள்ளிய உள்ளமும் ஒள்ளிய அறிவும்கொண்டவர். நான் அமைதி கொள்வது கடினமாக இல்லை.

மற்ற தமிழாசிரியர்களைப் பற்றியும் கவிஞர் கேட்டார். அ. ச. ஞானசம்பந்தனாரைப் பற்றிக்கூறினேன். கவிஞர்க்குப் பழம்புராணங்கள் போற்றுவோரைப் பற்றி நல்லெண்ணம் இல்லை. பிறரைப்பற்றிக் கருத்துக் கூறுவதில் கவிஞர் சாதாரணமாகவே நடந்து கொண்டார்.

என் கல்லூரிநாட்களில் பாரதிதாசனாருடன் நெருங்கிப் பழகும் ஓர் அன்பரின் நண்பரும் என்னுடன் பயின்றார். அவர் லால்குடியைச் சேர்ந்தவர். பாரதிதாசனாருடைய பழக்க வழ்க்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் நான் அவ்ர் வாயிலாகக் கேட்டதுண்டு. புதுவைப் பாரதிதாசனார்க்கு உள்ளூரில் மதிப்பில்லை என்று அவர் கூறுவார். தமிழகத்தின் பிற பகுதிகளில் மதித்துப் போற்றுவது போன்று அவருக்கு அவர் ஊரில் சிறப்பில்லையாம். அவர் வெளியில் சென்றுவிட்டு வரும்போது ரிக்க்ஷா