பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/180



வருத்தம் அவருக்கிருந்தது, சிவாசியைப் போற்றித் துதிபாடியது குயில், பேசும்பட வாய்ப்பினை எதிர்பார்த்து.பெரியாரின் தி.மு.க வெறுப்பரசியலில் புகுந்து 'கண்ணீர்த் துளிகளை'ச் சாடினார் கவிஞர்.

புகழையும்,பொருளையும் நாடிய அவர் உள்ளம் ஏமாற்றம் உற்றது. நிறைவேறாத ஆசைகள், உள்ளார்ந்த வருத்தம், எதிர்பாராத ஏமாற்றம், நிறைந்த உலகில் தனிமை-இவையே. இறுதியில் அவர் வாழ்க்கை. இவற்றோடு, உடன்பிறந்த நோய். நீரிழிவு. அவர் வாழ்க்கை,பல ஆண்டுகள் முன் முடிந்ததில் வியப்பில்லை.

இயக்கம், கட்சி; குழுஎன்ற நிலைகளில்

இயக்கத்தளவில் நின்றிருக்க வேண்டிய பாரதிதாசனார் குழுநிலைக்கு இறங்கினார். தமிழ்ப்பாவுலகம் அதனால் உற்ற இழப்பு ஈடுசெய்ய முடியாதது.