பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைக்குப் பலூன் பிடிக்கும். காரணம் அது எல்லாக் கடையின் முன்னாலும் தொங்கவிடப்பட்டிருக்கும். எனது காய்ப் பருவத்தில் சுத்தானந்த பாரதி பாட்டுத்தான் எனக்குப் பிடிக்கும். காரணம் பிரித்த பத்திரிகையில் எல்லாம் அவர் பாட்டுத்தான் வெளியாகியிருக்கும். எனது சொந்த ஊர், சிக்கலுக்குப் பக்கத்தில் உள்ள பழையனூர். பழையனூரில் நான் வழக்கமாகத் தேநீர் அருந்தும் கடையின் சொந்தக்காரன் அழகப்பன். அவன் தாடிச்சிங்கம் தந்தை பெரியாரின் தலைமையில் திருமணம் செய்து கொண்டவன். தூங்கும்போது கூடக் கருப்புச் சட்டையைக் கழற்ற மறுக்கும் திராவிடர் கழகத் தீவிர உறுப்பினன். ஒருநாள் தேநீரை ஆற்றிக் கொண்டே ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால்'...... என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை டைம் கொடுத்து வெட்டி வெட்டிப் பாடினன். அப்பாடலைக் கேட்டு அப்படியே மெய்மறந்து நின்றேன். அந்தக் கணமே சுத்தானந்த பாரதியின் பலூன் பாட்டைப் பறக்க விட்டுவிட்டுப் பாவேந்தர் வரிகளைப் பற்றிக் கொண்டேன். அன்றிலிருந்து நந்தனுக்குப் பிடித்த சிதம்பரப் பயித்தியம் போல், எனக்கும் புதுவைப் பயித்தியம் பிடித்துக் கொண்டது.

1941-ஆம் ஆண்டு ஜனவரி 14. அன்று பொங்கல் நாள். நான் காதலித்துக் கூட்டி வந்த பெண்ணோடு பாவேந்தர் வீட்டுக்கு வந்து அவர் முன்னால் நின்றேன். பாட்டு வரிகளில் பதித்திருந்த விழிகளை உயர்த்தி எங்களைக்