பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13/மார்கழியின் உச்சியில்


பாவேந்தரைச் சந்தித்த முதல்நாள் அச்சகத்திலிருந்து அவருடைய கவிதை ஒன்றின் திருத்தப்படி (Proof) வந்திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன்.

'மார்கழியின் உச்சியில்
வருக தைப்பொங்கல் நாள்' --

என்று தொடங்கிய கவிதை வரி என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. மார்கழித் திங்கள் முடிந்துவிட்ட செய்தியைக் குறிப்பிடுவதற்கு அவர் கையாண்ட 'மார்கழியின் உச்சி' என்ற சொல்லாட்சி எனக்கு மிகவும் புதுமை யாகத் தென்பட்டது.

நான் ஊருக்குச் சென்று மீண்டும் திரும்பி வந்து பாவேந்தரைச் சந்தித்தபோது எனக்கு ஒரு வேலை தரச் சொல்லிப் புதுவைத் துறைமுக அதிகாரி ஒருவருக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். நான் அதை எடுத்துக்கொண்டு துறைமுக அலுவலகம் நோக்கிச் சென்றேன். ஆனால் துறைமுகப் பகுதியை நெருங்குவதற்கு முன்பாகவே ஆபத்து என்னை வலை போட்டுத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்தேன். எந்தப் பெண்ணை நான் புதுவை அழைத்து வந்தேனோ, அந்தப் பெண்ணைச் சேர்ந்த சிலர் அங்கு கழுகுப் பார்வையோடு காத்துக் கொண்டிருந்தனர். நான் ஏன் துறைமுகத்துக்குள் நுழையப் போகிறேன்? பந்தைப்போல் வந்த சுவடு தெரியாமல் பாவேந்தர் வீட்டுக்கே திரும்பி விட்டேன்.

பாவேந்தரிடம் வந்து நடந்ததைச் சொன்னேன். 'சரி, சொல்றதைக் கேட்டுக்கிட்டு இங்கேயே இருந்திடு!' என்றார். நானும் சரியென்றேன். மாதம் இருபது ரூபாய் சம்பளம். அப்போதுபாவேந்தரின் மூத்த பெண் சரசுவதி சடங்காகி வீட்டிலே இருந்தார்கள். கோபதி பள்ளி மாணவன். நான் கோபதியைப் பள்ளிக்கு இட்டுச் செல்வேன். வீட்டுக்குக் காய்கறிவாங்கி வருவேன். பாவேந்தரின் முன்கோபத்துக்கு அஞ்சி, யாரும் அதிக நாள்