பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/16


யும், திருவள்ளுவர் படத்தை எழுதிப் புகழ்பெற்ற வேணுகோபால சர்மாவும், நானும் அதில் நடிகர்களாக இடம்பெற்றிருந்தோம். இன்ப இரவு நாடகம் சேலம் சென்ட்ரல் திரைப்படக் கொட்டகையில் முதன் முதல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இரண்டாவதாக நாமக்கல்லில் தொடர்ந்து நடைபெற்றது. அந்நாடகத்திற்குப் பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பிருந்தும் அனுபவக் குறைவின் காரணமாகத் தொடர்ந்து நடத்த முடியாமல் போயிற்று. பாவேந்தரின் பாடல்களுக்கு இசையமைத்து ஞானமணி மிக இனிமையாகப் பாடினார். அவர் பாடலைக் கேட்டவர் எல்லோரும் 'ஞானமணி’ என்ற பெயர் அவருக்குப் பொருத்தம் தான் என்று பாராட்டினர். பின்னர் ஞானமணி பாட, பயிற்சி பெற்ற சில பெண்கள் நாட்டியம் ஆடுவர். இறுதியில் புரட்சிக்கவி நாடகம் நடைபெறும். நான் அந்த நாடகத்தில் அமைச்சனாக நடித்தேன். 'காடைக்காரக்குறவ'னாக வேடமிட்டு நான் மேடையில் ஆடுவதும் உண்டு. 'புரட்சிக்கவி' காப்பியத்தை மேடைக்கு ஏற்ற முறையில் பாவேந்தர் அழகாக மாற்றி எழுதியிருந்தார். கவிஞன் உதாரன் அமுதவல்லிக்கு இலக்கணப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சியை மிக எளிமையாகவும், சுவையாகவும், புரியும்படியும் எழுதியிருந்தார். அந்நாடகத்தில் பளிச்சிட்ட சில கவிதைவரிகள் என் நெஞ்சத்தில் இன்றும் இனித்துக் கொண்டிருக்கின்றன. களவுப்புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த அரசிளங்குமரி அமுதவல்லி ஒருநாள் தோட்டத்திலிருந்து அரண்மனை திரும்புகிறாள். அவள் தோற்றத்தைக் கண்ட தோழியர் ஐயம் கொள்கின்றனர். அந்த ஐயத்தை அழகிய உவமை நயத்தோடு அந்தத் தோழியர் வெளிப்படுத்துகிறார்கள். மிக நயமான கற்பனை.

ஓடம் கவிழ்ந்து பின் உருப் பெற்றாலும்
புறத்தும் உள்ளும் புனலநனந் திருககும்.
தெருக்குள் உலவும் சித்திரத் தேர் உன்
உருக் குலேந்ததேன்? உள்ளதைக் கூறு.