பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Ο

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற புரட்சிப் பயிர் விளைந்த புதுவைப் பண்ணை பாவேந்தர் பிறப்பிடம்; அப்பண்ணையின் இரண்டாம் போகப் பயிர் கவிஞர் வாணிதாசன்.

பாவேந்தர் பயின்று பட்டம் பெற்று ஆசிரியர் பணி புரிந்த கல்வே கல்லூரியில் இவரும் பயின்று பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். எனவே கல்வே கல்லூரியின் இலக்கிய வரலாற்றில் பாவேந்தர் முதல் அத்தியாயம்; வாணிதாசன் இரண்டாம் அத்தியாயம்.

பாவேந்தர் புதுவையில் பிறந்து ஈரோட்டுக்குச் சென்றவர். வாணிதாசன் புதுவையில் பிறந்து ஈரோடு வழியாகக் காஞ்சி சென்றவர்.

'ஷாநாமா' எழுதிய பாரசீகப் பெருங்கவிஞன் ஃபிர்தௌசியைப் போல, இறந்த பின் அரசாங்கப் பரிசை எதிர்கொண்டவர்.

இவர் நூற்றுக்குநூறு பாவேந்தரின் மாணவர்; பாவேந்தரின் கவிதைப்பாணியை அப்படியே பின் பற்றி எழுதியவர். எப்போதும் கவிதைமயக்கத்தோடு வாழ்ந்தவர்; 'நன்றியுள்ளவன்' என்று பாவேந்தரால் பாராட்டப்பட்டவர். இங்கே பாவேந்தர் என்னும் பசும்பொன்னைத் தம் எழுத்துத் தராசில் எடை போட்டுக் காட்டுகிறார்.

Ο