பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27/பாவேந்தரோடு நான்: சில நினைவுகள்



லமைச்சராக இருந்த திரு. காமராசர் அவர்களைத் தாமே சென்று அழைத்துவந்து, தம் தலைமையிலேயே காமராசர் அவர்களால் இவருக்குப் புதுவை வேதபுரீசுவரர் கோயிலில் பொன்னுடை போர்த்தச் செய்து, தமிழுக்குத் தம் மாட்டுள்ள தனிப்பற்றையும், எவராக இருந்தாலும் தமிழைப் பயின்றவரைச் சிறப்பிக்கின்ற தம் தூய தமிழ் உள்ளத்தையும் விளக்கியுள்ளார்.

பாவேந்தர் மாணவர் குழுவில் குறிப்பிடத்தக்கவர்கள் நானும், புதுவைச் சிவம் எம். பி.யும், இன்னும் சிலரும் ஆவோம், கவியரசர் தமிழ்ப்பாடம் நடத்தும் முறையே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். மிகத் தெளிவாகவும். இனிமையாகவும் அவர் பாடம் நடத்துவார்.

புதுவையில் தன்மான இயக்கம் தளிர்விட்டுக் கொண்டிருந்தபோது கவியரசர் அவர்களின் கடும்உழைப்பால், பெருமுயற்சியால் புதுவையிலுள்ள ஒதியன் சாலையில் அமைந்த திரைப்படக்கொட்டகையில், பெரியார் ஈ.வே. இராமசாமி, அறிஞர் அண்ணாத்துரை ஆகியோரை அழைத்து மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பொதுவுடைமைக் கட்சி நல்ல நிலையில் வளர்ந்து ஓங்கியிருந்தது. பிரெஞ்சு அரசியலார் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் இன்றைய அமைச்சருமாகிய திரு.வ.சுப்பையாவைச் சிறையிலடைத்து வைத்திருந்தனர். அக்கட்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அது போது பாரிசில் படித்துவிட்டுப் புதுவைக்குத் திரும்பிவந்திருந்த புதுவையைச் சேர்ந்த திரு:லாம்பேர் சாவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். லாம்பேர் சாவனோ தமிழ் அறியாதவர்; பிரெஞ்சும் ஆங்கிலமும் அறிந்தவர், அவர் தூண்டுதலின்பேரில், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சிலர் புதுவையில் நடைபெறும் தன்மான இயக்க மாநாட்டைக் கலைக்க முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டியிருந்தனர்.

அப்போது புதுவையில் அகில இந்தியக் காங்கிரசுக்