பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/30


மறைந்த டி.என். இராமன், சலகண்டபுரம் ப.கண்ணன் முதலியவர்களின் ஒத்துழைப்பு, பெரிதும் பாராட்டத்தக்கது.

1950 ஆம் ஆண்டு கோவையில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி முதலியவர்களின் முயற்சியால், கோவை முத்தமிழ் மாநாடு ஒன்று நடந்தது. அதில் கவியரசர், நாவலர் ச.சோ.பாரதியார், கலைவாணர் என்.எஸ்.கே., கா.அப்பாதுரை, அறிஞர் அண்ணா. இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி முதலியவர்கள் பங்கு கொண்டனர். மாநாடு சிறப்புடன் நடந்தேறியது.

அதில் கவிஞர் தலைமையில் சிறந்த கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது. அப்போது நான் புதுவை கல்வே கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கவிஞர் அவர்கள் அக்கவியரங்கில் என்னைக் கலந்து கொள்ளும்படி பணித்தார்கள்.நான் சிறிது தயங்கினேன். அதற்குக் காரணம், நான் முன் குறிப்பிட்ட பேரறிஞர் பலர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாயிற்றே; கவிதை எழுதும் துறையில் தொடக்கநிலையில் இருக்கின்றோமே என்ற தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட அச்சங்களே ஆகும். என்றாலும், கவியரசர் சொல்லைத் தலை மேல்ஏற்றுத் துணிந்து அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உடன்பட்டேன். கவியரசரே என்னைத் தம்முடன் கோவைக்கு அழைத்துச் சென்றார். நான் கவியரங்கில் கலந்து கொண்டேன். அரங்கின் நடுவர்களாகக் கவியரசர், நெடுஞ்செழியன், அப்பாதுரை மூவரும் இருந்தனர். வெள்ளிக் கோப்பை ஒன்று பெற்று வந்தேன். கவிஞருடன் திரும்பிவரும் போது, கவிஞர் நடுவர்களாக இருந்தவர்கள் குறித்திருந்த மதிப்பெண் தாளை எடுத்துக் காட்டினர். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! கவிஞரைத் தவிர மற்ற இருவரும் என் கவிதைக்கே அதிக மதிப்பெண் தந்திருந்தனர். கவியரசர் ஒருவர் மட்டுமே எனக்குச் சிறிது குறைவாக மதிப்பெண்