பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




1928 ஆம் ஆண்டில் நான் இருபது வயது கட்டிளங் காளை.பகுத்தறிவுத் தந்தைப் பெரியார் அவர்களால் நடத்தப் பெற்ற 'குடியரசு' இதழை என் நண்பர் ஒருவர் வாராவாரம் கொண்டுவந்து கொடுப்பார். அதைப் படித்து நானும் நண்பர்கள் சிலரும் அக்கொள்கையில் ஆர்வமுடையவரானோம். பின்னர் 1929 இல் புதுவை முத்தியால் பேட்டையில் புதுமனை புகுவிழாவுக்குப் பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அன்று அவரது சொற்பொழிவைக் கேட்டுச் சுயமரியாதை இயக்கக் கொள்கையில் தீவிரமாக ஈடுபடலானேன். இதே ஆண்டில் பெரியார் கொள்கைக்கு எதிர்ப்பாக வைதீக மாநாடு ஒன்றும் இங்கு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின்போது, கனக சுப்புரத்தின வாத்தியார் (பாவேந்தர்) சுயமரியாதைக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதறிந்து, அன்று முதல் அவரிடம் தொடர்புகொண்டு பழகி வந்தேன். எங்கள் தொடர்பு 1946 வரை மிக நெருக்கமாக இருந்து வந்தது. இவ்வளவு காலம் யாரும் அவரிடம் நீடித்துப் பழகியதில்லை.

பாவேந்தரிடம் இலக்கணம் பயின்று கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வத்தால், நான் அவரை அடிக்கடி தொந்தரித்து வந்தேன். போதிய நேரம் இல்லாத காரணத்தால், என்னுடைய ஆவலை அவரால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை.

1930இல் தோழர் ம. நோயேல் அவர்களைப் பொறுப்-