பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/38



பொறுப்பாசிரியராகக்கொண்டு 'புதுவை முரசு’ என்னும் வார இதழ் தொடங்கப்பட்டது. அவ்விதழின் நிர்வாகத்தை நான் கவனித்து வந்தேன். 1931 இல் புதுவைப் பாதிரிமார்கள் 18 பேர் சேர்ந்து தோழர் ம.நோயேல் அவர்கள் மீது வழக்குத் தொடுத்தார்கள். அதனால் அவ்விதழின் பொறுப்பாசிரியர் பணியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. 1932இல் என்மீதும் மூன்று பாதிரிகள் வழக்குத் தொடுத்தார்கள். பொருளாதாரச் சங்கடம் புதுவை முரசிற்கு ஏற்பட்டதால், தொடர்ந்து அதை நடத்த முடியாமல் நிறுத்த வேண்டியதாயிற்று.

பாவேந்தரின் எழுத்தாற்றலுக்குச் சாணைக் கல்லாக விளங்கியது புதுவை முரசு இதழ்தான். இதில் அவர் அளவற்ற கவிதைகள், கட்டுரைகள், குட்டிக் கதைகள், நாடகங்கள், கனல் தெறிக்கும் தலையங்கங்கள் எழுதினர்.

1982இல், புதுவை அரசாங்கம் நடத்திவந்த தமிழாசிரியர் தேர்வுக்குத் தனிப்பட்ட முறையில் வகுப்பு நடத்தப் பாவேந்தர் முயன்றார். அதில் பலர் சேர்ந்து பயின்றனர். நானும் அதில் பயின்று 1934இல் தமிழாசிரியர் தேர்வில் வெற்றிபெற்றேன். இத்தேர்வின் பெயர் 'பிரவே தெ லாங்க் ஏந்திழேன்'[1] என்பது. இதற்கிடையே தனிப்பட்ட முறையில் பாவேந்தரிடம் இலக்கணம்-யாப்புப் பயின்று கவிதை எழுதத் தொடங்கினேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இவ்விருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் திரு.பாரதிதாசன் அவர்கள், ஒரு தலைசிறந்த கவிஞராவார்! ஒப்பற்ற கவிஞர் எனினும் பொருந்தும்.


  1. இத்தோ்வு பிரெஞ்சு மொழியில் Brevet De Langue Indigene என்று அழைக்கப்படும். பாவேந்தர் கல்வே கல்லூரியில் பயின்று பெற்ற பட்டம் இது தான் இது எஸ். எஸ். எல்.சிக்கும் பி.யூ.சிக்கும் இடைப்பட்ட பாடத்திட்டம் கொண்டது. இதைப் பயின்றவர் தமிழாசிரியராகப் பணிசெய்யப் புதுவைப் பிரெஞ்சு அரசால் அனுமதிக்கப்பட்டனர்.