பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமக்குத் தெரிந்ததை யெல்லாம்...!

தமக்குத் தெரிந்ததையெல்லாம் தம் மாணவர்கட்கும் தெரிவித்துவிட வேண்டும்; தாம் கற்றதையெல்லாம் தம்முடைய மாணவர்கட்கும் கற்பித்துவிட வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உடையவர் கவிஞர்.

நான் அவரிடம் சேர்ந்த புதிதில் கவிதைத் துறையைப் பற்றி எனக்கு விளங்காத ஐயங்களைக் கவியரசரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பேராசை இருந்தும், அச்சத்தின் காரணமாக ஒதுங்கியே இருந்து வந்தேன். போகப்போகத்தான் எனக்கு ஒரு பேருண்மை விளங்கியது. தம் மாணவர்களே கேட்கா விட்டாலும், தாமாகவே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற பெரியமனம் படைத்தவர் பாவேந்தர் என்பதே அவ்வுண்மை.

பாவேந்தர் கவிதைகளை எழுதி முடித்துவிட்டு அவற்றைப் படியெடுக்க என்னை அழைப்பார். அருகில் சென்றவுடன் தாம் எழுதிய கவிதையை நயம்பட நடிப்புப் பாவனையோடு எனக்குப் படித்துக் காண்பிப்பார். பிறகு "இந்த இடத்தில் இப்படி ஏன் வந்தது தெரியுமா? இது என்ன இலக்கணம்? இப்படித்தான் பாடல்களில் நம் எண்ணங்களை-கொள்கைகளை-நுழைக்க வேண்டும் இப்படிச் செய்ய வேண்டியதைப் புதிய அமைப்பில் நான் இப்படிச் செய்திருக்கிறேன்" -என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்-