பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49/உள்ளத்தில் மணக்கும் முல்லைச்சரம்



சில் சுருட்டு அவர் வாயில் புகைந்து கொண்டிருந்தது. மேலும் தொடர்ந்தார்:

“நம் பரம்பரை வீரம் இந்தக் காலத்து இளைஞரிடம் இல்லை; வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. எல்லைப்போர் எக்காலத்தும் வரும், அதற்காக உயிர் கொடுத்துப் போரிட வீரர் நாட்டிற்கு என்றும் தேவை. எனவே, உயிரினங்கள் உயிரோடு அறுக்கப்பட்டு, வெட்டப்பட்டு, அவை இரத்தம் சொட்டச் சொட்டத்துடிக்கும் காட்சியைச் சிறுவயதிலிருந்தே நம் குழந்தைகளுக்குக் காட்டிப் பழக்கவேண்டும். இந்தக் காலத்து இளைஞர் சிரங்கிலிருந்து சீழ்வடிந்தால் கூட ஓவென்று நடுங்கி மயக்கம் போட்டு விழுந்து விடுகின்றனர்.’’

நிறுத்துகிறார் கவிஞர்.

இதற்குள் சைவ உணவுத்தோழர் முக்கால் பங்கு கவிஞர் வழிக்கு வந்து விட்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்து, வேகவேகமாகத் தலையை ஆட்டுகின்றார்; ஆமாம் போடுகின்றார்.

மீண்டும் கவிஞர் தொடர்கிறார்:

“கத்தரிக்காய் வெண்டைக்காயில் என்ன சத்து இருக்கிறது என்றால் வைட்டமின் ஏ..பி..சி.. என்று அடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு வெண்டைக்காய்ச் சத்தும் அவற்றில் இல்லை. இவைகளை நம்பி நீ இருப்பதால் தான் இப்படி நோஞ்சானாக இருக்கிறாய்! என்னைப் பார்! என் உடம்பைப் பார்! நான் புலிக்கறியே சாப்பிடுகிறேன் தெரியுமா?”

அங்கிருந்தவர் அத்தனை பேரும் ஆவென்று வாயைப் பிளக்கின்றனர். "பொன்னடி அந்த டப்பாவில் இருக்கும் புலிக்கறி வற்றலை இவர்களுக்கு எடுத்துக் கொண்டு வந்து காட்டு!” என்று ஆணையிடுகிறார். (அப்போது ஒரு புகழ்பெற்ற நடிகர் கவிஞருக்குப் புலிக்கறி வற்றல் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்).