பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51/உள்ளத்தில் மணக்கும் முல்லைச்சரம்



டைய பேச்சு 'பாண்டியன் பரிசு’ப் படப்பிடிப்பின்பக்கம் திசை திரும்புகிறது.

“பாண்டியன் பரிசுத் தலைவனும் தலைவியும் கடைசியில் ஒன்றுகூடிப் பூங்காவில் ஆடிப்பாடுவதாக நேற்று ஒரு பாட்டு எழுதினேனே.. என்ன அடி?... உ.ம்...(அவரே பாடுகிறார்)

விடியும் போது விடியட்டுமே
வெண்ணிலாவே! -பொழுது
விடியும் வரை அமுதமழை
வெண்ணிலாவே!

இது எப்படி! எளிமையாக இருக்குமல்லவா?’’

“பாட்டு எளிமையாக இருப்பதோடு கருத்தாழத்தோடும் இருக்கிறதையா!”

“இந்தப் பாடல்வரும் காட்சிதான் படத்தின் கடைசிக் காட்சி. எனவே நன்றாக அமையவேண்டும். மைசூர் பிருந்தாவனத்தில் இக்காட்சியைப் படமெடுக்க வேண்டும். மைசூரில் உள்ள ஆறு ஒன்றில் காதலர் படகில் பாடிச்செல்வது போல எடுக்கவேண்டும். வெளிப்புறக் காட்சிகளுக்கு மைசூர் ஏற்ற இடம்.”

“படகில் காதலர் பாடிச் செல்வதுபோல் பல திரைப் படங்களிலும் வந்திருக்கிறதே ஐயா"- என்று நான் முந்திரிக்கொட்டைத் தனமாக உளறிவிட்டேன். கவிஞர் என்ன சொல்வாரோ என்று உள்ளுக்குள் நடுக்கந்தான்.

"அப்படியா! அந்த இடத்தில் வேண்டுமானால் கொஞ்சம் மாற்றம் செய்துகொள்ளலாம்," என்று கூறிய கவிஞர், நீண்ட அமைதியில் மூழ்கி விடுகிறார். அவருடைய இடையில் நெகிழ்ந்திருந்த கட்டம்போட்ட